அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் எமது தற்காப்பு உரிமை செல்லுபடியாகுமா?


இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு-89 தொடக்கம் பிரிவு-99 வரையான ஏற்பாடுகள் தற்காப்பு
உரிமையின் செயற்பாட்டு எல்லைகளையும் அதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மற்றும் அதனை எந்நேரத்தில் எத்தகைய வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஏற்பாடு செய்கின்றது. சாதாரண காலப்பகுதியில் குறித்த தற்காப்பு உரிமையினை பயன்படுத்துவது பற்றி இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையின் மேற்படி பிரிவுகளின் கீழ் உள்ள பரிந்துரைப்புகளின் படி அதன் செயற்பாடு தீர்மானிக்கப்படும்.


எனினும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் குறித்த தற்காப்பு உரிமையினை சொத்தழிப்புச் செயலில் ஈடுபடுபவர் அல்லது ஈடுபடுபவர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்ற ஐயம் எழுகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள 2120ஃ5 ஆம் இலக்க 22.04.2019 திகதிய அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழான விதி-25 உப-விதி-(02) இன்  ஏற்பாடு தற்காப்பு உரிமையின் பயன்பாட்டு எல்லையை கீழ்வருமாறு கூறுகின்றது.


சட்டவிரோதமான கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருக்கும் ஒருவரால் தவறான முறையில் ஆதனம் ஒன்றிற்கு ஏற்படுத்தப்படும் அழிவினைத் தடுக்கும் நோக்கில் தற்காப்பு உரிமையை பிரயோகிக்கும் போது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு-96 யின் கீழ் விபரிக்கப்பட்டவாறு செயற்பட்டு தவறான செய்கையை செய்பவருக்கு எதிராக மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அல்லது வேறு ஊறினை ஏற்படுத்தும் அளவுக்கு அவ்வுரிமையை பாவிக்க இவ்விதி ஒழுங்கு செய்கின்றது.


மேற்படி தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு-96 யின் படி ஆதனத்தைப் பாதுகாக்கும் தற்காப்பு உரிமை இதே கோவையின் பிரிவு-92ம் பிரிவில் குறிப்பிடப்பட்ட மட்டுப்பாடுகளுக்கமைய (பகிரங்க ஊழியரால் நல்லெண்ணத்துடன் உத்தியோக போர்வையின் கீழ் செய்யப்டும் செயல் தவிர) எத்தவறைப் புரிதல் அல்லது புரிய எத்தனித்தல் அவ்வித உரிமையைப் பிரயோகிக்க சந்தர்ப்பம் அளித்ததோ அத்தவறு இதனகத்துப்பின்னர் எண்னிட்டுக் கூறப்பட்ட விவரணங்களுள் எதனையேனும் உடையதாயின் தீங்கிளைத்தவருக்கு வேண்டுமென்றே மரணத்தை அல்லது வேறு ஏதேனும் தீங்கை விளைவிக்கும் அளவுக்கு விரிவானதாகும்.


முதலாவது- கொள்ளை,
 இரண்டாவது-இரவில் வலிந்து வீடு புகுதல்
 மூன்றாவது- மனித வாழ்விடமாக அல்லது ஆதனத்தை பாதுகாக்கும் இடமாக பயன்படுத்தும் கட்டிடம், கூடாரம், அல்லது கலம் எதன்மீதும் தீயினால் அல்லது வெடிபொருட்களினால் புரியப்படும் சொத்தழிவு.
 நான்காவது- அவ்விதம் தற்காப்புரிமை பிரயோகிக்கப்படாவிட்டால்  அதன் விளைவு மரணம் அல்லது கடும் காயம் ஏற்படுவதாகும்  என்ற பயத்தினை நியாயமானளவில் ஏற்படுத்தக் கூடிய அத்தகைய சூழ்நிலையின் கீழான திருட்டு, சொத்தழிவு அல்லது வீடு அத்துமீறல்.

மேற்படி ஆதனம் சம்பந்தமான தற்காப்பு உரிமை தொடங்கும் சந்தர்ப்பங்கள் மற்றும் அதன் செயற்பாட்டுக்காலம் என்பன குறித்த சட்டக்கோவையின் பிரிவு-98யில் 1ம், 2ம்,3ம்,4ம் மற்றும் 5ம் விவரணத்தினூடு கூறப்பட்டுள்ளது. குறித்த தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு-89 தற்காப்புரிமையைப் பிரயோகிப்பதில் செய்யப்படுமெதுவும் தவறாகாது என கூறுகின்றது.
M.L.Faizer,
Attorney-at-law,



அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் எமது தற்காப்பு உரிமை செல்லுபடியாகுமா? அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் எமது  தற்காப்பு உரிமை செல்லுபடியாகுமா? Reviewed by Madawala News on May 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.