உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக சஜித் போர்க்கொடி ...உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக் கைவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தை
முன்னர் இருந்ததைவிட பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், பூகோள பயங்கரவாதம் இலங்கையிலும் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில், உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கைவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டும்.

அதற்கு மேலும் பல ஏற்பாடுகளை இணைக்க வேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்பனவற்றை பாதுகாத்தல் என்பதை தேசிய ஒழுங்கு பத்திரத்திலிருந்து சற்று ஒதுக்கிவைத்து, பயங்கரவாதத்தை தடுக்க தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக சஜித் போர்க்கொடி ... உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக சஜித் போர்க்கொடி ... Reviewed by Madawala News on May 18, 2019 Rating: 5