கண்டி அருப்பொல பிரதேசத்தி தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் என ஊடகங்களில் வெளியான செய்தி தவறு !! - Madawala News Number 1 Tamil website from Srilanka

கண்டி அருப்பொல பிரதேசத்தி தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் என ஊடகங்களில் வெளியான செய்தி தவறு !!கண்டி அருப்பொல பிரதேசத்தில்  சஹ்ரான் ஹாஷிம் பயிற்சி பெற்றதாக  கூறப்படும் பயிற்சி
முகாம் தொடர்பான  செய்தி நேற்று தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பில்  சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் திரு SM விக்ரமசிங்க அவர்களுடன் தொலைபேசியில் உடனடியாக தொடர்புகொண்டு வினவிய அதேவேளை  கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு சிசிர குமார அவர்களையும் நாம் சந்தித்து வினவினோம்.

இதுவிடயமாக பாதுகாப்பு தரப்பு வழங்கிய தகவல்களின் படி ,

கடந்த  2018 மார்ச் மாதம் கண்டியில் கலவரம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சஹ்ரான்  ஹாஷிம் என்பவர் கண்டி பிரதேசத்திற்கு வந்து மூன்று நாட்கள் அருப்பொலைக்கு அன்மையில் இருக்கும் தர்மாசோக மாவத்தையில் பெரும்பாண்மை இனத்தவர் ஒருவருக்கு சொந்தமான வாடகைக்கு கொடுக்கப்படும் வீடொன்றில் தங்கிச் சென்றுள்ளதாகவும் CID மூலமாக அறியக்கிடைத்ததுடன் அங்கு பொலிஸ் மற்றும் இராணுவம் சோதனை செய்துள்ளனர். 

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் கூறியது போல் இது ஒரு பயிற்சி முகாமாக பாவிக்கப்பட்டமைகான  அல்லது தீவிரவாத செயல் நடைபெற்றமைக்கான எந்த ஒரு தடயமும் இல்லை என்பதனையும் தெரிவித்தார்கள். 

எனவே இன்று நடைபெறும் நிகழ்வுகள் பற்றி சில மீடியாக்கள் தவறாக மக்களை வழி நடாத்துவததை நாம் அறிவோம். குறித்த விடயமும் அவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட செய்தி என்பதை அறித்தருகிறோம். 

ஹிதாயத் சத்தார்
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்
கண்டி அருப்பொல பிரதேசத்தி தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் என ஊடகங்களில் வெளியான செய்தி தவறு !! கண்டி அருப்பொல பிரதேசத்தி தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் என ஊடகங்களில் வெளியான செய்தி தவறு !! Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5