ஆளுநர் அஸாத் சாலியின் வெசாக் தின வாழ்த்து செய்தி - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஆளுநர் அஸாத் சாலியின் வெசாக் தின வாழ்த்து செய்திபுனிதமான வெசாக் பூரணை தினத்தைக் கொண்டாடி மகிழும் இலங்கை வாழ் மற்றும்
உலகளாவிய பௌத்த மக்களிற்கு எனது சாந்தியும், சமாதானமும் நிறைந்த இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்து நிற்கின்றேன்.
அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ மனிதனை எளிதாக்கும்பிறருக்கு தானதர்மம் செய்தல், தியானத்தில் ஈடுபடுதல், சமய அனுட்டானங்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதற்கு  அழைப்புவிடுக்கும் நாளாக இத்தினம் அமைகின்றது. 
புத்தபிரான் வகுத்துச் சென்ற பாதையானது மனிதன் வாழ்வதற்குரிய சரியான வழிகாட்டியாக அமைகின்றது. இரு தசாப்தகாலங்களிற்கும் மேலாக புத்தரின் போதனைகளின் அடிப்படையில் பயணிக்கும்  நாடாக பெருமைப்பட முடிகின்றது. 
புத்தபிரான் தன்னுடைய பிறப்பால் மட்டுமன்றி தன்னுடையசெயல்களால் ஒரு மாபெரும் மனிதனாக வாழும் வழிகளைப் போதித்தார். இது முழு மனித குலமும் பிணைப்பு வாழ்வதற்கான  உன்னதமான கருத்தாகமாறிவிட்டது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்தரிபால சிறசேன அவர்களின் பொது மன்னிப்பின் அடிப்படையில் வெசாக் பூரணை தினத்தில் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யப்படுகின்றமையானது மனிதாபிமானம், சமாதானம், சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 
எமது நாட்டில் தேசிய ஒற்றுமைசமாதானம் மற்றும் கடந்த காலத்தினூடான எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுகின்ற நாளாகவும் அமைகின்றது. எமது மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் தலைமையின் கீழ் அரசியல்மதவேறுபாடுகளற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சிந்தனைகளை ஏற்படுத்திக்கொள்வோம்.  
ஆஸாத் சாலி
மேல் மாகாண ஆளுநர்.
ஆளுநர் அஸாத் சாலியின் வெசாக் தின வாழ்த்து செய்தி ஆளுநர் அஸாத் சாலியின் வெசாக் தின வாழ்த்து செய்தி Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5