நாளைய ஹர்த்தால் அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே.



நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் காரணம் காட்டி கிழக்கு ஆளுனர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்
அவர்களின் ஆளுனர் பதவிநிலைக்கு எதிரான நாளைய ஹர்த்தால்  அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே.


"வேண்டுமென்றே துவேஷ உணர்வுகள் திணிக்கப்படுவதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள்."

அதேபோல், 

"திட்டமிட்டு இனவாதம் வளர்க்கப்படுகிறது என்றால் தேர்தல் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்."

ஒரு சிலரது அரசியல் தேவைகளுக்காக ஒட்டுமொத்த கிழக்கு மக்களையும் இன்றைய கருத்தாலுக்கு அழைத்திருப்பதை அரசியல் திணிப்பாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எந்தவித அடிப்படையும் இல்லாமல் இனவாதச் செயற்படுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த அப்பாவி தமிழ்மக்களையும் பகடைக்காயாக மாற்ற முயலுவது இன்னும் பல தசாப்தங்கள் தமிழ்மக்களை பின்னோக்கி நகர வைக்கும் என்பதனை தமிழ் இனத்திலுள்ள புத்திஜீவிகளும் புரிந்துகொள்வார்கள் என்றே கருதுகின்றோம்.

இதேபோன்று, கடந்த காலங்களிலும் மக்களை துவேஷ உணர்வுகளால் வழிப்படுத்தி பலரை நாடற்றவர்களாகவும், நடுத்தெருவிலும் விட்டிருக்கிறீர்கள் என்பதனை தெளிந்த மனதுடன் சம்பந்தப்பட்ட இனவாதிகள் புரிந்துகொள்ளவும் வேண்டும். தமிழர்கள் தனக்கான உரிமையினைப்  பெற்றுக் கொள்ளும் அதே வேளை முஸ்லீம் மக்களுக்கான உரிமையினையும் பெற்றுக் கொள்ள உந்துவது இந்த நாட்டில் நிரந்தர சகவாழ்வை ஏற்படுத்தும்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிலரால் அரங்கேற்றப்படும் இனவாத தாக்குதல்களுக்கும் - தற்போதைய நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்தறது என்றே தோன்றுகிறது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியலுக்காக அதிலும் குறிப்பாக தேர்தல்கள் நெருங்கி விட்டால் இனவாதம் கக்கப்படுவதும், பிரதேசவாதம் பேசப்படுவதும் இயல்புதான் இருந்தாலும் இதனால் அப்பாவி மக்கள் தேவையற்ற முறையில் பாதிக்கப்படுவதுதான் கவலையாகவுள்ளது.

இவ்வாறான இனவாதங்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்கள் அப்பாவி தமிழ் மக்கள்த்தான் என்பதனை சம்பந்தப்பட்ட இனவாத நடவடிக்கைகளுடன் தொடர்பானவர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். இதற்கு பல உதாரணங்கள் கடந்தகால அனுபவங்களிலும் மிகத் தெளிவாக இருக்கிறது.

இவ்வாறான இனவாத நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எவைகளை கடந்த காலத்தில் இழந்தார்கள்.

1. தங்களது பாசமான சிறுவர்களின் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.

2. அன்பான குடும்பத்தார்களை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக அனுப்பியுள்ளார்கள்.

3. அண்மைய தரவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அதிக வறுமையில் சிக்குண்டிருப்பவர்கள் முஸ்லீம்களைவிட தமிழ் மக்கள்தான் அதிகம்.

4. அதிகமான தமிழ் இளைஞர்கள் எவ்வித இலக்குகளும் இல்லாமல் முஸ்லீம்களை விட அதிகமாக மதுபோதைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

5. கடந்த கால தமிழ் ஈழ வடுக்களில் இருந்து இன்னும் மீழாத பல அப்பாவி தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

6. தமிழ் அரசியல்வாதிகளை வைத்து தமது பிரதேச அரசியலை முறையாக செய்யப் பழகாத தமிழ் மக்கள்.

"தேர்தல் காலங்களில் கோயிலுக்கு இரண்டு ஒலிபெருக்கியும், இரவு நேரங்களில் பருகுவதற்கு  மதுபானங்களும்தான்  அதிமான தமிழ் இளைஞர்களின் முற்போக்கற்ற நடைமுறைகளாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது"

ஒன்றை மட்டும் சம்பந்தப்பட்ட குழப்பதாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான இனத்துவேசங்களால் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்களே. ஏனென்றால் திட்டமிடப்பட்ட பொருளாதார நடைமுறைகள், சமூக கலாசார விடயங்கள் முறையாக தமிழ்ப்பகுதிகளில் அமுல்படத்தப்படவில்லை என்பதுதான்.

அதேபோல் கிழக்கு கிழக்காகவும், வடக்கு வடக்காகவும் இருப்பதுதான தமிழ், முஸ்லீம் மக்களுக்கு பிரயோசனமானது அதனால் முஸ்லீம் ஆளுனரோ அல்லது முதலமைச்சரோ கிழக்கில் முஸ்லீமாக இருப்பதில் எந்தவித தவறும் இல்லை.

கடந்தகாலங்களில் தமிழ் மக்களை தமிழ் ஈழம் என்ற பெயரில்  நட்டாற்றில் விட்டு சின்ணாபின்னமாக்கியவர்கள்தான் இன்று தமிழ் சமூகம், தமிழ் மக்களின் வளர்ச்சி, என்றெல்லாம் அரசியல் பேசுகிறார்கள் என்பதனை புரிந்துகொள்ளாதவரை இவ் இனத்துவேசங்களை எம்மால் தவிர்க்க முடியாது என்பதே உண்மையுமாகும்.

அரங்கேற்றம் செய்யப்பட்ட ISIS பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாரிய அரசயல் காரணிகள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்ற அதேவேளை திட்டமிட்டு முஸ்லீம்களின் மத கலாசார விடயங்களுக்கு பல தடைகளும் ஏற்படுத்தப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் தங்கள் சார்பான கவனயீனங்களை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆளுனர் பதவியை இல்லாமல் செய்ய எத்தனிக்கும் நாளைய கருதாலுக்கான அழைப்பானது திட்டமிட்ட இனவாதமே.

[MLM- சுஹைல்]
நாளைய ஹர்த்தால் அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே. நாளைய ஹர்த்தால்  அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே. Reviewed by Madawala News on May 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.