ஜனாதிபதி,பதவியில் நீடிக்க நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி மீண்டும் அவமானப்படப் போகின்றார் .


(ஆர்.யசி)
இந்த ஆண்டில்  ஜனாதிபதி தேர்தலை நடத்தியாகவேண்டும். இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்கால
எல்லை குறித்து நீதிமன்றத்தை நாடி  ஜனாதிபதி மீண்டும்  அவமானப்படப்போகின்றார்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

 தமது பலவீனத்தை அறிந்து எப்படியேனும் அதிகாரத்தில் ஒட்டிகொண்டிருக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் ஆட்சி எல்லைக்காலம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தல் தள்ளிப்போகும்  வாய்ப்புகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்று ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார். அன்றில் இருந்து ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார். அவ்வாறு இருக்கையில் இப்போது அவரது கால எல்லை எப்போது நிறைவுக்கு வருகின்றது என்ற கேள்வியை அவரது அணியினர் மூலமாக அவர் கேட்கின்றார்.

 இந்த விடயத்தில் மிகத் தெளிவாக தெரியும் அவரது ஐந்து ஆண்டுகால பதவிக்காலம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முடிவுக்கு வரவேண்டும். 19 ஆம் திருத்த சட்டத்தை நிறைவேற்றியது ஜூன் மாதமாக இருந்தாலும் ஜனவரி மாதம் தொடக்கம் அவர் பதவியில் இருந்து வருகின்றார். ஒருவேளை  19 ஆம் திருத்த சட்டம் இந்த மாதமே நிறைவேற்ற முடிந்திருந்தால் இன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்
ஜனாதிபதி,பதவியில் நீடிக்க நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி மீண்டும் அவமானப்படப் போகின்றார் . ஜனாதிபதி,பதவியில்  நீடிக்க  நீதிமன்றத்தை நாடி  ஜனாதிபதி மீண்டும் அவமானப்படப் போகின்றார் . Reviewed by Madawala News on April 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.