மின் துண்டிப்பு இடம்பெறும் என சென்ற வருடமே எதிர்வு கூறிய சம்பிக்க ரணவக்க .


கடந்த சில தினங்களாக நாடுபூராகவும் மின் துண்டிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என,
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடந்தாண்டே அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து எதிர்வு கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் அமைக்கப்படாதென்றும், குறித்த காலப்பகுதிகளில் அதிக விலையுடன் அவசர மின் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என்றும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுக்கு ஏற்படவுள்ள இந்த நட்டத்தை குறைப்பதற்காகவே அமைச்சர் பாட்டலி சம்பிக்கவால் இவ்வாறு  அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியின் போது ஏற்படும் தாமதம் காரணமாக, இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் நட்டம், நிதி பிரச்சினைத் தொடர்பில் நேரடியாக தொடர்புடையவர்கள் குறித்து விசாரணையை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் யோசனையொ​ன்றை முன்வைத்திருந்தததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மின் துண்டிப்பு இடம்பெறும் என சென்ற வருடமே எதிர்வு கூறிய சம்பிக்க ரணவக்க . மின் துண்டிப்பு இடம்பெறும் என சென்ற வருடமே எதிர்வு கூறிய சம்பிக்க ரணவக்க . Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.