மேல் மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரிய பற்றாக்குறையை போக்க ஆளுநர் அசாத் சாலி எடுத்த நடவடிக்கை.


இலங்கைத் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் (Sri Lanka Institute of Advance Technological Education (SLIATE), 
ஆங்கில உயர் டிப்ளோமாவை ( HNDE) பூர்த்தி செய்த அனைவரும் மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி குறிப்பிட்டார்.

இலங்கை தொழில்நுட்பவியல் பட்டதாரிகள் 60 பேருடன்  மேல் மாகாண பட்டதாரி ஆசிரிய பதவிவெற்றிடம் தொடர்பில் இடம் பெற்ற சந்திப்பின்  பின்னர் ஆளுநர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

 மேல் மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ. பீ. எம். அலவி அவர்களால் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டவரப்பட்டது.

ஊவா, சப்பிரகமுவ, வடமத்தி மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆசிரிய நியமனம் தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகளுக்கு வழிங்கப்படுகின்ற போதிலும் மேல் மாகாணத்தில் வழங்கப்படுவதில்லை என பட்டதாரிகள் குற்றம் சாட்டினர்.

அவர்களுடைய  கோரிக்கையைக் கவனத்திற் கொண்ட ஆளுநர் மேல் மாகாணத்தில் நிலவுகின்ற அனைத்து பதவிவெற்றிடங்களும் மேல் மாகாணத்தில் வசிக்கும் விண்ணப்பதாரிகளால் மட்டுமே நிரப்பப்பட முடியும் எனவும், ஆசிரிய வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் எனவும் உறுதியளித்தார்.  அத்துடன் கல்விக்கு முக்கிய முன்னுரிமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Mohammed Rasooldeen- Justice of the Peace
Media Secretary
Western Province Governor's Office
மேல் மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரிய பற்றாக்குறையை போக்க ஆளுநர் அசாத் சாலி எடுத்த நடவடிக்கை. மேல் மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரிய பற்றாக்குறையை போக்க ஆளுநர்  அசாத் சாலி எடுத்த நடவடிக்கை. Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.