சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்ணீர் போத்தல் வழங்கிய சிறுமி.


--பாறுக் ஷிஹான்--
கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு
சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் ஒன்றினை வழங்குவதை படத்தில் காணலாம்.

இன்று(29) காலை 7.30 மணி முதல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை குடி கடற்கரை வீதி தொடக்கம் சாய்ந்தமருது வரையான பிரதேசங்களில் இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.மதியம்  2 மணிவரை இடம்பெற்ற மேற்படி தேடுதலில் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் நான்கு தோட்டாக்கள் ஷாயிப் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் யாழ் மாநகர சபையின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அங்கு தேடுதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் குறித்த தோட்டாக்களை மீட்டதுடன் இரு சந்தேக நபர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

தொடர்ந்து மேற்குறித்த பகுதிகளில் இடம்பெற்ற தேடுதலில் மோட்டார் சைக்கிள் இலக்க தகட்டினை போலியாக பொருத்தி சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு இளைஞர்கள் விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்ணீர் போத்தல் வழங்கிய சிறுமி. சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்ணீர் போத்தல் வழங்கிய சிறுமி. Reviewed by Madawala News on April 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.