முஸ்லிம்கள் கோழைகளல்ல ! இன்று ஜும்மாவை நடத்துங்கள் ; ஆஸாத் சாலி வேண்டுகோள் ..



இன்று நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் ஜும்மாவை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்த சந்தர்ப்பத்திலும் நாம் பள்ளிவாயல்களை மூடிய வரலாறு இல்லை எனவே அச்சுறுத்துல்களுக்கு பயந்து மார்க்கத்தின் கடமையை விட்டு விட வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

அகில இலங்கை ஜம்மியா தலைவர் ஜனாதிபதியிடம் கதைத்த போது முஸ்லிம்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் சிக்கல் இல்லை என அவர் கூறியதாகவும் பாதுகாப்பை தான் உறுதி செய்துள்ளதாகவும் ஜானாதிபதி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழந்த ஒரு சமூகம் எனவும் நாம் இது மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை நெருங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அச்சுருத்தல்களுக்கு பயந்து முஸ்லிம்கள் கடமையை விடமுடியாது என அவர் வலியுருத்தியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்கள் கருதி ஜும்மா தொடர்பாக பிரச்சினை இருக்கும் என கருதுபவர்கள் ஜம்மியாவின் வழிகாட்டல் படி நடந்துகொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.


முஸ்லிம்கள் கோழைகளல்ல ! இன்று ஜும்மாவை நடத்துங்கள் ; ஆஸாத் சாலி வேண்டுகோள் .. முஸ்லிம்கள் கோழைகளல்ல ! இன்று ஜும்மாவை நடத்துங்கள் ; ஆஸாத் சாலி வேண்டுகோள் .. Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.