இந்த அரசாங்கத்தில் யாரும் நான் சொல்வதை கேட்பதில்லை.


இந்த அரசாங்கத்தில் யாரும் நான் சொல்வதை கேட்பதில்லை  என்று ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ எழுதிய "“The Viceroy Special”"  புத்தக  சிங்கள மொழிபெயர்ப்பின் போது  பேசிய ஜனாதிபதி சிறிசேன,

கொழும்பிலிருந்து கண்டி எக்ஸ்பிரஸ்வே நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு பொறுப்பேற்றுள்ளவர்கள், மலைகளை உடைப்பதை   தடுக்கவும், சுற்றுச்சூழல் நாசமாவதை தடுப்பது தொடர்பிலும்   என் வழிமுறைகளை புறக்கணித்துவிட்டு செயல்படுகிறார்கள்.

இதிலிலிருந்து இந்த அரசாங்கத்தில் யாரும் நான் சொல்வதை கேட்பதில்லை என்பது தெளிவாக புரிகிறது;

 "நான் சுற்றுச்சூழலின் பொறுப்பாளராக உள்ளேன்.
நான் ஒரு பொறியியலாளர் அல்ல, ஆனால் சுற்றுச்சூழலை நேசிக்கிற ஒருவர், இந்த வெளிப்பாதை கட்டப்பட வேண்டும் என நான் விளக்கினேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அம்பேபுஸாவிலிருந்து குருநாகல் வரை மலைப்பகுதிக்கு தீங்கு விளைவிக்காமல் எக்ஸ்பிரஸ்வே கட்டப்பட வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினேன்.

இன்றும் குருநாகல் வரையான புகையிரத பாதைக்கு 35 நிமிடங்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. குருநாகலை, கண்டி ஆகிய இடங்களிலிருந்து சாலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். ஆனால், மலைகளை உடைகத்து செல்லும்  வழியைத் தவிர்க்க வேண்டும் என  நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன், ஆனால் அவர்கள் என்னைக் கேட்கவில்லை என்று தோன்றுகிறது "என்று அவர் கூறினார் (ஹர்ஷன துஷார சில்வா)
இந்த அரசாங்கத்தில் யாரும் நான் சொல்வதை கேட்பதில்லை. இந்த அரசாங்கத்தில் யாரும் நான் சொல்வதை கேட்பதில்லை. Reviewed by Madawala News on March 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.