ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மற்றுமொரு நடவடிக்கை. கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள்  கையளிப்பு.


ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை.


கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள் படையினரால் ஆளுநரிடம் கையளிப்பு.


ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த முற்பது வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு நலன்கருதி படையினர் வசம் இருந்த காணிகளே இன்று படையினரால் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 


அதற்கமைவாக முதன்மை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வகையில் 5.5 ஏக்கர் காணிகளே இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. அம்பாரை மாவட்டத்தின் பெரயநீலாவணை திருக்கோவில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி திரயாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காணிகளே இதில் உள்ளவாங்கப்பட்டுள்ளது.


காணி அனுமதிப்பத்திரங்களை கிழக்கு பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகரவினால் உரிய ஆவணங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.


இராணுவ பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரச உயர் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மற்றுமொரு நடவடிக்கை. கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள்  கையளிப்பு. ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மற்றுமொரு  நடவடிக்கை.

கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள் 

கையளிப்பு. Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.