(படங்கள்) கண்டியில் ஊடக பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.


இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன் கண்டி "நியுஸ் வீவ்" ஊடக நிறுவனம்
நடத்திய ஒரு வருட ஊடகப் பாடநெறியை நிறைவு செய்த முதல் தொகுதி மாணவர்களுக்கான சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) கண்டியில் இடம்பெற்றது.


 ஒரு வருட ஊடகவியல் துறை கற்றைநெறியைப் பூர்த்தி செய்த 20 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் குறிப்பிட்ட  வைபவம்  கண்டி ''மகாவலி ரிஷ்''(Mahaveli Reach) ஹோட்டலில் "நிவ்ஸ் விவ்" (Newsveiw) தலைவர் இர்பான் காதர் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் விஜேசந்திரன், விஷேட அதீதியாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் , உளவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அனஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.மூத்த ஊடகவியலாளர்கள் சிலரும் அதிதீகளாக கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சிநெறியின் வளவாளர்களான "றொய்டர்" ROUTERS ஷிஹார் அனீஸ், லண்டன் BBC தமிழோசை சீவகன் பூபாலரத்னம், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பைரோஸ், "டெய்லி பிரர்" பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் ஆலோசரகர் அய்யூப், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்கு முக்கிய உறுப்பினர் ஹுசைன் ஆகியோர்களுகளின் பங்களிப்பை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பயிற்சிபெற்று வெளியேறியவர்கள் இத்துறையில் தொடர்ந்து பங்களிப்புச் செய்யவும் பிராந்தியத்தின் மக்கள் தேவைகளை பேசுவதற்காக  kandytimes.lk என்ற பெயரியல் தனித்துவமான இணையதளம் ஆரம்பித்துத்து வைக்கப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தின் பூரண அனுசரணையில் நடாத்தப்பட்ட கற்கைநெறியை அக்குரணை "நிவ்ஸ் விவ்" பத்திரிகை பூரண ஒருங்கிணைப்பு, மேற்பார்வை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்: எம்.எல்.எஸ்.முஹம்மத் &
A Raheem Akbar
மடவளை பஸார்



(படங்கள்) கண்டியில் ஊடக பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு. (படங்கள்) கண்டியில் ஊடக பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.