வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது... அவதானமாக இருங்கள்.


அதிக வெப்பநிலை குறித்து கூடுதல் அவதானம் தேவை என வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் வெப்பநிலை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேலைத்தளங்களில் கூடுதல் நீர் அருந்தி இயலுமானவரை நிழலை நாடுமாறு பணியாளர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.

வீடுகளில் வசிக்கும் முதியவர்களை, நோயாளிகள் மீது கூடுதல் கவனம் தேவை. வாகனங்களில் பிள்ளைகளை தனியாக விட வேண்டாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அரச தகவல் திணைக்களம்

வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது... அவதானமாக இருங்கள். வெப்பம்  அதிகரித்துக்கொண்டே செல்கிறது... அவதானமாக இருங்கள். Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5