புதிய பயங்கரவாத தடைச் சட்டம் CTA ஜனநாயாக கட்டமைப்புகளுக்கு முரணென எதிர்க் கட்சிகள் தெரிவிப்பு, முஸ்லிம் கட்சிகளும் ஆதரிக்க கூடாது!



அமுலில் உள்ள PTA (Prevention of Terrorism Act) பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டில் உள்நாட்டுக் கிளர்ச்சி இருந்த காலத்தில் (1979) கொண்டுவரப்பட்டு பிரிவினைப் பயங்கரவாதம் நிலவிய காலம் முதல் தீவிர அமுலில் இருந்த போதும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் பேரில் அது நீக்கப்பட்டு CTA எனும் Counter Terrorism Act கொண்டுவரப்படவுள்ளது, இல்லாத அடிப்படைவாதம் மதவாதம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகங்கள் இலக்கு வைக்கப் படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொது எதிரணி கூட்டணிக் கட்சிகள், ஜே வீ பீ என பல தரப்புக்களும் எதிர்க்கும் நிலையில் தமிழர் தேசியக் கூட்டணியின் ஆதரவுடன் புதிய CTA எனும் Counter Terrorism Act சட்டமாக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் மனோ கணேஷன் தரப்பினர் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக சொல்ல வேண்டும், குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்கக் கூடாது.



உள்நாட்டுக் கிளர்ச்சி மற்றும் பிரிவினைவாத வன்முறைகளை பயங்கரவாதத்தை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரவென 1979 இல் கொண்டுவரப்பட்டு பின்னர் பல திருத்தங்களைக் கண்ட PTA (Prevention of Terrorism Act) பயங்கரவாத தடைச் சட்டம் பாரிய அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துவருவதாகம் விசாரணைகளின்றி  நீண்டகால தடுத்து வைப்புகள் சிறைகளில் சித்திரவதைகள், கைதானபின் காணாமல் ஆக்கப்படுதல், பலவந்தமாக வாக்குமூலங்கள் பெறப்படல் என இன்னோரன்ன விடயங்கள் சுட்டிக் காட்டப் படுவதால் அதனை நீக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசு இருக்கிறது.



அதற்கு மாற்றீடாக சில சர்வதேச நியமங்களை உள்வாங்கிய குறிப்பாக சரவதேச அளவில் பயங்கரவாத் ஒழிப்பு என்ற பெயரில்  அறிமுகமான சட்டங்களை தழுவிய CTA எனும் Counter Terrorism Act சட்டம் அறிமுகப் படுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


உண்மையில் PTA ஐ விடவும் CTA  ஆபத்தானது என்பதனை தென்னிலங்கை தரப்புக்கள் உணர்ந்துள்ளன, குறிப்பாக அரசியல் பழிவாங்கல்கள் அடக்குமுறைகளுக்காகவும் அது பயன்படுத்தப் பட வாய்ப்புக்கள் உள்ளதாக பல்வேறு தரப்புக்களும் அச்சம் தெரிவித்து வருகின்றன, அதேவேளை தற்பொழுது நாட்டில் போரோய்ந்து சமாதானம் நிலவுகின்ற நிலையில் இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதம் பயங்கரவாதமென பல்வேறு நியாயங்கள் கற்பிக்கப் பட்டே மேற்படி சட்டவாக்கம் மேற்கொள்ளப் படுவதாகவும் பல்வேறு தரப்புக்களும் குறிப்பிட்டுள்ளன.


குறிப்பாக PTA ஐ விடவும் CTA  தமிழ் மக்களுக்கு பாதகாமானது அல்ல என்று முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைத்து தமிழ் மக்களை ஏமாற்றியே தமிழ் தேசியக் கூட்டணி மேற்படி புதிய சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்க முடியும்.


புதிய சட்டமூலத்தின் இந்த நாட்டு மக்கள் இடது சாரிகளோ முஸ்லிம்களோ உலகின் எந்தவொரு பாகத்திலேனும் இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பவோ கருத்துக்கள் தெரிவிக்கவோ அவ்வாறான தகவல்களை பகிர்ந்துகொள்ளவோ முடியாத நிலையும் வரலாம் என அச்சம் தெரிவிக்கப் படுகிறது.


உண்மையில் இந்த சட்டம் தற்பொழுது இந்த நாட்டிற்குத் தேவைதானா ? அல்லது பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்த விரும்புகின்ற அல்லது இந்து சமுத்திரத்தில் தமது இராணுவ மூலோபாய நகர்வுகளை மேற்கொள்ள விரும்புகின்ற மேலைத்தேய மேலாதிக்க சக்திகளில் நலன்களுக்கு தேவைப் படுகின்றதா ? என்ற கேள்விகளும் எழுப்பப் படுகின்றன.



உதரணமாக காஷ்மீரில் பலஸ்தீனில் எகிப்தில் சிரியாவில் அல்லது சீனாவில் பர்மாவில் என ஏதாவது ஒரு தேசத்தில் இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்து இலங்கை மண்ணில் குரல் எழுப்புவது நட்பு நாடுகளின் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் என்று காண்கின்ற பட்சத்தில் அல்லது குறிப்பிட்ட நாடுகள் வேண்டுகோல் விடுக்கின்ற பட்சத்தில் அவ்வாறான ஜனநயாக உரிமைகள் கூட நசுக்கப் படுவதற்கு இந்த சட்டம் இன்றில்லாவிட்டாலும் என்றேனும் வழிகோலும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.


இஸ்லாமிய அடிப்படைவாதம் இஸ்லாமியப் பயங்கரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் போன்ற  இஸ்லாமோபோபிய பிரயோகங்கள் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் பல சர்வதேச பிராந்திய சக்திகளால் அரசியல் பொருளாதார இராஜதந்திர இலக்குகளுக்காக பயன்படுத்தப் படுவதும் முஸ்லிம்கள் மீது அழிவுகள் திணிக்கப் படுவதும் இல்லாத பயங்கரவாதங்கள் உருவாக்கப் படுவதும் சர்வசாதாரணமாகிவிட்ட ஒரு யுகத்தில் இலங்கை போன்ற ஒரு பல்லின பல மத கலாசார சமூகங்கள் வாழும் ஒரு தேசத்தில் இவ்வாறான சட்டங்கள் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதனை யூகித்துப் பார்க்க முடியும்.



உதாரணத்திற்காக காஷ்மீர் மக்களின் போராட்டம் அவர்கள் தரப்பில் விடுதலைக்கான போராட்டமாகும் இந்தியாவின் பார்வையில் பயனங்கரவதமாக இருக்கலாம், பலஸ்தீன் மக்களின் போராட்டம் அவர்களது விடுதலைக்கான போராட்டமாகும் ஆனால் அதனை இஸ்ரவேல் பயங்கரவாதமாக பார்க்கிறது, உயிகூர் மக்களின் அடிப்படி உரிமைகளுக்கான கோரிக்கைகள் கம்யூனிஸ் அசீனாவின் பார்வையில் பயங்கரமாக இருக்கிறது, அராகான் முஸ்லிம்களுடைய விடுதலைக்கான போராட்டம் மியன்மாரின் பார்வையில் பயங்கரவாதமாக சித்தரிக்கப் படுகின்றது.


நாளை இந்த நாட்டின் இருதரப்பு பலதரப்பு இராஜதந்திர உறவுகள் சர்வதேச அரங்கில் நீதி நியாயத்திற்கான குரல்களை இந்த மண்ணில் பிரதிபலிக்க முடியாத ஒரு நிலையும் வரலாம், முஸ்லிம்களைப் பொறுத்தவரை நங்கள் ஒரு சர்வதேச சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய அல்லது முஸ்லிம் நாடுகளில் இடம்பெறுகின்ற விவகாரங்களால் பாதிக்கப் படுகின்றவர்கள் பலவேறு இஸ்லாமிய சிந்தனை பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் எனவே இவ்வாறான சட்டங்கள் குறித்து இரட்டிப்பு அவதானம் எங்களுக்கு தேவைப் படுகின்றது.


வரலாறு நெடுகிலும் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் இறைமைக்கும், ஆள்புல ஒருமைப் பாட்டிற்கும், அச்சுறுத்தல் விடுக்கப் பட்ட பொழுதெல்லாம் முஸ்லிம்கள் தமது தேசப்பற்றை வெளிப்படுத்தியவர்கள், அதற்கான பாரிய விலையையும் கொடுத்தவர்கள், எந்தவொரு இக்கட்டான கால சூழ்நிலைகளிலும் வன்முறையை ஆயுதங்களை நாடாதவர்கள், எந்தவொரு பிறநாட்டு பிறநாட்டு ஆயுதக் குழுக்களுடனும் தொடர்புகள் இல்லாதவர்கள் இந்த நாட்டின் பொதுவான சட்டங்களை ஜனநயாக கட்டமைப்புகளை மதித்து நடக்கின்றவர்கள், நாங்கள் தேசத்தின் நன்மைக்காக கொண்டுவரப்படுகின்ற சட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு தருகின்றவர்கள்.


ஆனால், இல்லாத அடிப்படைவாதம், பயங்கரவாதம் என்பவற்றின் பெயரால் இன்றோ அல்லது நாளையோ அடக்குமுறைகளுக்கு ஆளாவதனை நாங்கள் ஒரு தேசத்தவறாக அனுமதிக்கப் போவதில்லை, அதேபோல் இந்த நாட்டின் பரும்பன்மைச் சமூகங்களும் அச்சம் தெரிவிக்கின்ற எமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை கேள்விக்கு உற்படுத்துகின்ற ஒரு சட்டமூலத்தை எந்த வகையில் எம்மால் ஆதரிக்க முடியும்!


அடிப்படைவாத இன மத வெறி சக்திகள், அதேபோல் பாரிய குற்றச் செயல்களை ஈடுபாபவர்கள் யாராக இருப்பினும்  எந்த சமூகத்தை இனத்தை மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் நாட்டிலுள்ள குற்றவியல சட்டங்களை உச்ச அளவில் பயன்படுத்தி அவர்களுக்கெதிராக தண்டனைகள் வழங்கப் படுவதனை எவரும் எதிர்க்கப் போவதில்லை.


மாறாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு PTA , ICCPR சட்டங்கள் சீறிப் பாய்வதுபோல் நாளை CTA எனும் Counter Terrorism Act பாகுபாடுகளுடன் சீறிப் பாய்வதற்கு இடமளிக்கவோ இடம் வைக்கவோ கூடாது.



மேற்படி சட்டமூலம் அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கப் பட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உற்பட ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கக் கூடாது மாறாக பொது எதிரணியினர் மற்றும் ஜே வீ பியுடன் இனணந்து எதிராகவே வாக்களிக்க வேண்டும், அதேவேளை வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடாது.

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் CTA ஜனநாயாக கட்டமைப்புகளுக்கு முரணென எதிர்க் கட்சிகள் தெரிவிப்பு, முஸ்லிம் கட்சிகளும் ஆதரிக்க கூடாது! புதிய பயங்கரவாத தடைச் சட்டம் CTA ஜனநாயாக கட்டமைப்புகளுக்கு முரணென எதிர்க் கட்சிகள் தெரிவிப்பு, முஸ்லிம் கட்சிகளும் ஆதரிக்க கூடாது! Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.