தொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் வரை அபராதம்; 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை



தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை
அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. மண்டாவல தெரிவித்தார்.

தொல்பொருட்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன் பிரகாரம், தண்டப்பணம் 50,000 முதல் 5 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளது.

தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிப்பவர்ளுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனையையும் 2 வருடங்களிலிருந்து 5 முதல் 15 வருடங்களாக அதிகரிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

1940 ஆம் ஆண்டு இலக்கம் 9-இன் கீழான தொல்பொருள் கட்டளைச் சட்டம் இறதியாக 1998 ஆம் ஆண்டு திருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் வரை அபராதம்; 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை தொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் வரை அபராதம்; 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை Reviewed by Madawala News on March 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.