கல்முனை வடக்கு பிரசே சபையை தரமுயர்த்துவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில் அதனை தடுக்க ஹரீஸ் எம்.பி யார்.



கல்முனை வடக்கு பிரசே சபையை தரமுயர்த்துவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில்
அதனை தடுக்க ஹரீஸ் எம்.பி யார். தமிழர்களின் நிலத்தை காணிகளை பிரித்தெடுப்பதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்  மேலும் கூறுகையில், 

வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாது, பிரிக்கக்கூடாது என ஹரிஸ் எம்.பி முன்வைத்திருந்தார். இது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும். 

தமிழ் மக்கள் நிர்வாக ரீதியான ஒரு அலகை பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். 1999ஆம் ஆண்டில் இருந்து இந்த பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது. இதற்கு தேவையான ஆளணி சேவைகள் வழங்கியுள்ள நிலையில், அதனை தரமுயர்த்தும் நடவடிக்கை தடுக்கப்படக்கூடாது. இவர்கள் தமது வங்குரோத்து அரசியலை முன்னெடுப்பதற்காக எமது தமிழ் பிரதேசங்களை தரமுயர்துவதில் தடையாக உள்ளார். இது கவலைக்குரியதும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. 

இங்கு 29 தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாமல் தடுப்பதற்கு இவருக்கு யார் இந்த அதிகாரங்களை கொடுத்தது.தமிழர்களின் நிலத்தை காணிகளை பிரித்தெடுப்பதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கல்முனை வடக்கு பிரசே சபையை தரமுயர்த்துவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில் அதனை தடுக்க ஹரீஸ் எம்.பி யார். கல்முனை வடக்கு பிரசே சபையை தரமுயர்த்துவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில் அதனை தடுக்க ஹரீஸ் எம்.பி யார். Reviewed by Madawala News on March 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.