கணவனுக்கு மனைவி செய்த ''சேவை'' ! மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரு' சம்பவம்'


மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக உள்ள கணவருக்காக உணவிற்குள் பொரித்த
மீன் நடுப்பகுதியில் 210 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்து கொடுக்க முயன்ற மனைவியை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம்(13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று - ஆலம்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருளுடன் அண்மையில் கைது செய்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபரின் மனைவி கணவனை பார்ப்பதற்காக நேற்றைய தினம் பகல் 12.00 மணியளவில் சிறைச்சாலைக்கு உணவுடன் சென்றிருந்தார்.

இதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த உணவை சோதனை செய்தபோது, அதில் பொரித்த மீனின் குடல் பகுதியில் சூட்சமமான முறையில் 210 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து எடுத்துவந்துள்ளதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள், குறித்த பெண்ணை கைது செய்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கணவனுக்கு மனைவி செய்த ''சேவை'' ! மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரு' சம்பவம்' கணவனுக்கு மனைவி செய்த ''சேவை'' ! மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரு' சம்பவம்' Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5