இப்பொழுது மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த காரணம் முன்பு செய்த பாவங்களே.


முன்பு செய்த பாவங்களின் காரணமாகவே தற்போது மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த
நேர்ந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போதைய காலப்பகுதிவரை, கேள்விக்கு ஏற்றவாறு மின்சார உற்பத்தித்துறை அபிவிருத்தி செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்கு மணிநேர மின்சார விநியோகத் தடை காரணமாக, வர்த்தகத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு, இந்த மின்சார விநியோகத் தடையினால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும்  மின்சார விநியோகத் தடை காரணமாக பொதுமக்களும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு காலநேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த காரணம் முன்பு செய்த பாவங்களே. இப்பொழுது மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த காரணம் முன்பு செய்த பாவங்களே. Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.