டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வருகிறது.


டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்களை கொண்டுவருவதற்கு எம்.சி.சி., ஐ.சி.சி.யிடம் சில
பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த குழுவில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந் நிலையில் மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழுவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன்போது எம்.சி.சி. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் கீழ் கண்ட பரிந்துரைகளை முன்வைத்தன.

நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் எலக்ட்ரோனிக் கடிகாரம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தாமதமாக பந்து வீசும் புகார் அதிகமாக எழுகிறது. இதை கவனத்தில் கொண்டு நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் எலக்ட்ரோனிக் கெடிகாரம் பொருத்தப்படும்.

இதன் மூலம் ஓவர் முடிந்ததும் 45 வினாடியில் இருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் புதிய துடுப்பாட்ட வீரருக்கு 60 வினாடிகளாகவும், மாற்று பந்து வீச்சாளராக வருபவருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும்.

கவுண்ட்டவுன் முடியும்போது போது துடுப்பாட்டம் அல்லது பந்து வீச்சுக்கு இரண்டு அணி தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கவுண்ட்டவுன் முடிந்ததும் ஆட்டத்தை தொடங்காவிட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

அத்துடன் விதிமீறல் தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்ட அணியை தண்டிக்கும் வகையில் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்படும்.

மேலும் விக்கெட் வீழ்ச்சியின் போதும் இதேநேரம் முறை பின்பற்றப்படும். ஆனால் ஆடுகளத்தில் இருந்து வீரர்களின் ஓய்வறை இருக்கும் தூரத்தை வைத்து இந்த கால அளவில் மாற்றம் இருக்கும்.

 நோ-பால் வீசினால் பிரீஹிட் 

ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் பிரீஹிட் வழங்கப்பட வேண்டும்.

‘பிரீஹிட்’ வழங்கப்படும் போது, டெஸ்ட் போட்டிலும் நோ-பால் வீசப்படுவது குறையும்.

ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்தல்

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பமாகவுள்ளதால் அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும். இதற்காக டியூக்ஸ் வகை பந்தை பரிந்துரைசெய்துள்ளது.

மேற்கண்ட எம்.சி.சி.யின் பரிந்துரைகள் குறித்து ஐ.சி.சி.விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://circleofcricket.com/category/Latest_news/34122/mcc-to-decide-on-new-rules-like-free-hit-on-no-balls-in-tests-countdown-clock-and-use-of-a-standard-ball
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வருகிறது. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.