பாடசாலை உப அதிபரின் கேடு கேட்ட செயல்.. 13 வயது மாணவி சீரழிவு.


பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்வம் தொடர்பில்
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் உப அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்..

சூரியவெவ – அந்தரவெவ பகுதியை சேர்ந்த 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதான மாணவியே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமக்கு வந்த   தொலைபேசி அழைப்பிற்கு அமைய செயல்பட்ட அங்குனுபெலஸ்ஸ காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவியை உப அதிபர், பலமுறை இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவிக்கும் அதிபருக்கும் இடையே காணப்பட்ட நட்பினால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னர் உப அதிபர் அங்குனுபெலஸ்ஸ நகரில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் மாணவியை தங்க வைத்து இவ்வாறு பலமுறை அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

மாணவி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய உப அதிபர் கைது செய்ய்பட்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினம் அங்குனுபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பாடசாலை உப அதிபரின் கேடு கேட்ட செயல்.. 13 வயது மாணவி சீரழிவு. பாடசாலை உப அதிபரின் கேடு கேட்ட செயல்..  13 வயது மாணவி சீரழிவு. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5