மடவளை மனிதரால் நெதர்லாந்து சுற்றுளா பயணிகளுக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.மடவளை வங்குவக்கடையைச் சேர்ந்த S.M. ரிஸ்மி (Kwik fit motors உரிமையாளர்)
ஒரு பணப்பையை கண்டெடுக்கின்றார்.

அதில் நெதர்லாந்து நாட்டுப் பிரஜைகள் இருவரின் பல ஆயிரம் பணம், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் காணப்பட்டன.


குறித் நபர்களை தொடர்புகொண்டு அவற்றை ஒப்படைக்கும் நோக்கில் முயற்சித்தவருக்கு இலங்கையில் அவர்களை தொடர்பு கொள்ள எவ்வித தகவலும் கிடைக்கவில்லை,


இறுதியில் அதில் இருந்த ஒரு பற்றுச்சீட்டில் உள்ள மாத்தளையில் உள்ள ஒரு சுற்றுளா விடுதியை தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பில் விசாரித்த போதும் எதுவித தொடர்பு கொள்வதற்கான தகவல் கிடைக்கவில்லை பதிலாக அவர்களின் ஆச்சர்யமும் பாராட்டுமே கிடைத்தன காரணம் இவ்வாறு ஒரு நல்ல மனிதரை அவர்கள் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை.


எனினும் தனது தொடர்பிலக்கங்களை கொடுத்து குறித் நெதர்லாந்து பிரஜைகள் தொடர்பு கொண்டால் வழங்குவதற்கும் வேண்டிக் கொண்டுள்ளார்.


தொடர்ந்து கண்டி சுற்றுளா பொலிஸ் பிரிவினரால் தொடர்பு கொள்ளப்பட்ட S.M. ரிஸ்மி அவர்கள் குறித்த சுற்றுளா பிரயாணிகள் தொடர்பில் கூறி இவரை கண்டி சுற்றுளா பொலிஸ் பிரிவிற்கு வருமாறு வேண்டிக் கொண்டமைக்கு அமைய அங்கு சொன்று குறித்த சுற்றுளாய பயணிகளை சந்தித்து பணப்பையை ஒப்படைத்தார்.


இச்செயலானது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மை இன பொலிஸ் அதிகாரிகளை ஆச்சர்யப்பட வைத்ததுடன் அதற்காக இவரை பாராட்டவும் செய்தது.


தமது சேவைக்காலத்தில் இவ்வாறான ஒரு சில நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவை அனைத்திலும் முஸ்லீம்களே தொடர்பு பட்டுள்ளனர் எனத்தெரிவித்ததோடு குறித்த சுற்றுளா பயணிகளிடமும் இது தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


குறித்த சுற்றுளா பயணிகளும் தமது பணப்பை மீழ கிடைக்காது என நிர்க்கதியடந்திருந்த போதிலும் S.M. ரிஸ்மி அவ்களின் மூலமாக அவற்றை உரியவாறாக பெற்றுக்கொண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.


அத்தோடு அவர்கள் அதனை திரும்பவும் பெற்றுக்கொள்வார்கள் என நினைத்தேன் இருக்கவில்லை. மேலும் இச்செயல் அவர்களுக்கு இலங்கை பற்றியும் இலங்கை முஸ்லீம்கள் பற்றியும் ஒரு நல்லபிப்பராயத்தையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நன்றி கூறும் வகையில் பண அன்பளிப்பொன்றை அவர்கள் வழங்க முன்வந்தபோதிலும் அதனை அன்பாக மறுத்த S.M. ரிஸ்மி அவர்கள் 'இதற்காக இறைவன் வழங்கும் நன்மைகள் மாத்திரமே தனது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.


எனினும் குறித்த சுற்றுலாப்பயணிகள் தங்களது நாட்டை அடைந்ததும் தமது மிழ்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் ஒரு கடிதம் அடங்கிய பரிசுப் பொதியை அனுப்பி வைத்துள்ளனர்.


இவ்வாறான முன்மாதிரிமிக்க செயல் மூலமாக S.M. ரிஸ்மி அவர்கள் மடவளைக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தகவல்: M.B. அஹமட் நிஸ்ரி

மடவளை மனிதரால் நெதர்லாந்து சுற்றுளா பயணிகளுக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு. மடவளை மனிதரால் நெதர்லாந்து சுற்றுளா பயணிகளுக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு. Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5