தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு - ஐக்கிய இராச்சியம்(NIO)


இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தக்கூடிய,நீண்டு நிலைக்கக்கூடிய புனரமைப்பு மற்றும்
மேம்படுத்தல் நடவடிக்கைகளை,எமது கலாச்சாரம் ,பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுற்கு ஏற்ப,எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக ஆராய்ந்து ,அதற்கேற்ப செயலாற்றும் “தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு-ஐக்கிய இராச்சியம் “ தனது அங்குரார்பன நிகழ்வினை வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துகிறது.

நேரம்- பிற்பகல் 3 மணி,
நடைபெறும் இடம்- vale farm sports centre,Watford road,London HA0 3HG.

எந்த விதமான பாகுபாடுகளுமின்றி அனைத்து இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும்,
மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு உதவுவதும் என்ற அடிப்படையில்,அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றீர்கள்.

தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில்,ஒரு நீண்ட கொடிய யுத்தம் ஏற்படுத்தியுள்ள இழப்புக்கள் பின்னடைவுகளில் இருந்து விடுபட்டு,
இலங்கையின் ஏனைய பிரதேசங்களிற்கு சமமாக வருவதற்கு மேலதிக முயற்சிகள்,உழைப்புக்கள் தேவைப்படுகின்றன.


கிடைக்கக்கூடிய ஒவ்வொரு துரும்பையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம் . எம்மிடையே உள்ள கலைஞர்கள்,

பத்திரிகையாளர்கள்,தொழில்விற்பன்னர்கள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவரும் இம்முயற்சியில் கைகோர்த்து ,இம்முயற்சி வெற்றி பெறுவதை உறுதி செய்யுமாறு, ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.

நன்றி.
தொடர்புகளுக்கு –

Dr Suresh Surendran (Phone – 07982 651473; E-mail intellectualbridge@gmail.com)
Dr Indunil Wijenayake (Phone – 07702007517; E-mail – niosrilankauk@gmail.com)

தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு - ஐக்கிய இராச்சியம்(NIO) தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு - ஐக்கிய இராச்சியம்(NIO) Reviewed by Madawala News on February 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.