"பிரதேச சபையின் அனுமதியின்றி மாயக்கல்லி மலையருகில் கட்டடம்"




கிழக்கின் புதிய ஆளுநரிடம்  இறக்காமம் மாயக்கல்லி காணி வழங்கலை ரத்துச் செய்யுமாறு இன்று எழுத்து மூலம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பில் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதி இன்று இறக்காமம் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று மலையடிவாரம் சென்று வேலுக்குட்டி நாகராஜாவை அவ்வட்டாரத்தின்  சமாதான கூட்டமைப்பு  வேட்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான சமீம் சந்தித்து கட்டடம் கட்டுவதற்கான பின்னணியை அறிந்து கொண்டுள்ளார்.

பிரதான வீதியில் இருந்து அமைக்கப்படும் கட்டடத்திற்கு சரியாக நேர் உச்சியிலேயே சிலை உள்ளது இதனை கீழ் உள்ள படங்களை சூம் செய்து பார்க்கலாம்.

இதற்கு பிரதேச சபை கட்டட அனுமதி  வழங்க முடியாது எனவே உடனடியாக பிரதேச சபையின் குறித்த வட்டார உறுப்பினர் இதனை சட்ட ரீதியாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வேட்பாளரும் அமைப்பாளருமான சமீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
"பிரதேச சபையின் அனுமதியின்றி மாயக்கல்லி மலையருகில் கட்டடம்"  "பிரதேச சபையின் அனுமதியின்றி மாயக்கல்லி மலையருகில் கட்டடம்" Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.