கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வழக்கில் இருந்து பூரணமாக விடுதலை.

(அப்துல்சலாம் யாசீம்) 
ஹொரவ்பொத்தான - கிரலாகல புராதன விகாரை புகைப்படம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு
பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று (05) கெப்பித்திகொல்லாவ நீதிமன்றம் பூரணமாக  விடுவித்துள்ளது.

கெப்பிட்டிகொல்லாவ நீதவான் எச். கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ்  முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டிற்கும்  முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டிற்கு தலா ( அரசு செலவு உட்பட) ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும்  நீதவான் இன்று கட்டளையிட்டுள்ளார்.

எட்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள்  சிராஸ் நூர்தீன்,  சப்ராஸ் ஹம்சா, ருஷ்தி ஹபீப், குழுவினர் கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றில் 45 நிமிடங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வாதாடினர் .


இதனை அடுத்து அவர்கள் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் முதலாவது குற்றச்சாட்டில் மதங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்த குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. 

இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இவர்கள் தெரியாத நிலையில் முகநூலில் பதிவு செய்ததாகவும்  இவர்களின் எதிர்காலம் குறித்து மன்னித்து விடுதலை வழங்குமாறும் நீதிமன்றத்தை கோரியிருந்தனர். 

பிணை வழங்க முடியாதென பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று வாதாடப்பட்டது.

கடுமையான வாதப்பிரதிவாதத்தின் மத்தியில் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களின் முயற்சியினால் குறித்த 8 மாணவர்களும்  தண்டப்பணத்துடன் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு மாணவர்களின் கைவிரல் அடையாள பதிவை எடுக்கும் முயற்சியையும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் முறியடித்து வெற்றிகண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வழக்கில் இருந்து பூரணமாக விடுதலை. கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வழக்கில் இருந்து பூரணமாக  விடுதலை. Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5