பாதுகாப்பு செலவுகளுக்காக சுமார் 40 ஆயிரம் கோடி, ஜனாதிபதிக்கு 1355 கோடி, பிரதமருக்கு 162 கோடி.. வெளியாகும் பட்ஜெட் விபரங்கள்.


நாட்டின் பாதுகாப்பு செலவுகளுக்காக சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக உத்தேச செலவுகள் அடங்கிய யோசனை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதில் பாதுகாப்புச் செலவுகளுக்காக 39,306 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே வரவு செலவுத் திட்டத்தில் ஒரு துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக உள்விவகார அமைச்சிற்காக 29,239 கோடி ரூபா நிதி ஓதுக்கீடு செய்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக 1355 கோடி ரூபாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்காக 162 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருக்காக 9.5 கோடி ரூபாவும், நாடாளுமன்ற செலவுகளுக்காக 358 கோடி ரூபாவும், தேர்தல் ஆணைக்குழுவிற்காக 484 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மொத்தச் செலவுகள் 2312 பில்லியன் ரூபா என நிதி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

Sauce : http://divaina.com/daily/index.php/puwath-2/23628-2019-02-04-13-43-61 
பாதுகாப்பு செலவுகளுக்காக சுமார் 40 ஆயிரம் கோடி, ஜனாதிபதிக்கு 1355 கோடி, பிரதமருக்கு 162 கோடி.. வெளியாகும் பட்ஜெட் விபரங்கள். பாதுகாப்பு செலவுகளுக்காக சுமார் 40 ஆயிரம் கோடி, ஜனாதிபதிக்கு 1355 கோடி,  பிரதமருக்கு 162 கோடி.. வெளியாகும் பட்ஜெட் விபரங்கள். Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5