இந்நாடு பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்க அனைத்து இன மக்களும் மீண்டும் போராட வேண்டியுள்ளது.



(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்க அனைத்து இன மக்களும் மீண்டும் போராட
வேண்டியுள்ளது என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் அனைத்து இன மக்களாளும் கொண்டாடப்பட்டது இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாட்டில் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தாலும் அதனைப் கவனத்திற் கொள்ளாமல்   நம் நாட்டின் 71 வது சுதந்திர தினத்தை இன மத பேதமின்றி அனைவரும் கொண்டாடி மகிழ்ந்ததை காணமுடிந்தது.

இலங்கைத் திரு நாட்டின் சுதந்திரத்திற்காக அன்று இனம் மதம் பாராது பல உயிர்களை இழந்து பல்வேறு போராட்டத்துக்கு மத்தியில் சுதந்திரத்தை பெற்றெடுத்தோம் ஆனால் இன்று இனங்களுக்கிடையில் இனவெறுப்புக்கள் உண்டாகி ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் அழித்தொழிக்கும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை திருநாட்டில் 1948 யில் சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருளாதாரங்கள் அழிக்கப்பட்டு நிம்மதியின்றி வாழ்ந்த அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ்ந்த காலத்தை நம்மால் மறக்க முடியாது.

ஆனால் இன்று இன ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் சில தீய சக்திகள் மீண்டும் இந்நாட்டை கூறு போடுவதற்காக எத்தனிக்கின்றார்கள். இத் தீய சக்திகளுக்கு எவரும் துணை போகாமல் அனைத்து இன மக்களும் நம் நாட்டு மக்கள் எனும் சிந்தனையோடு அனைவரும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அதுதான் எமக்குக் கிடைக்கும் உண்மையான சுதந்திரம் என்று தெரிவித்தார்.

இத் தீய சக்திகளை முறியடித்து நாட்டில் என்றும் நிம்மதியும் சுதந்திரமும் கிடைக்க நாட்டின் சகல இன மக்களும் ஒர் அணியில் நின்று போராட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நாடு பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்க அனைத்து இன மக்களும் மீண்டும் போராட வேண்டியுள்ளது. இந்நாடு பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்க அனைத்து இன மக்களும் மீண்டும் போராட வேண்டியுள்ளது. Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.