FLASH NEWS #ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவன தேர்தல்.. உலகக்கோப்பை கேப்டன் அர்ஜுன ரணதுங்க தோல்வி.


பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிற்போடப்பட்டு வந்த ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவன தேர்தல்
இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

 ஏற்கனவே  தலைவராக ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் முன்னால் தலைவர் திலங்க சுமதிபால அணியை சார்ந்த சம்மி சில்வா  தெரிவு செய்யப்பட்ட நிலையில்,

உப தலைவருக்கான தேர்தல் இடம்பெற்றது.
இதில் இலங்கை அணியின் உலகக்கோப்பை வென்ற தலைவர் மற்றும் அமைச்சர்  அர்ஜுன ரணதுங்கவும் போட்டியிட்டார்.

இந்நிலையில் திலங்க சுமதிபால அணியை சேர்ந்த ரவின் விக்கிரமரத்னவிடம் இவர்  தோல்வி அடைந்துள்ளார்.

 ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் முன்னால் தலைவர் திலங்க சுமதிபால தான் ஒரு கிங் மேக்கர் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவன செயலாளராகவும் அவரின் அணியை சேர்ந்த மொஹான் டி சில்வா 96 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நிஷாந்த ரணதுங்க பெற்றது 43 வாக்குகள் மட்டுமே.
FLASH NEWS #ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவன தேர்தல்.. உலகக்கோப்பை கேப்டன் அர்ஜுன ரணதுங்க தோல்வி.  FLASH NEWS #ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவன தேர்தல்.. உலகக்கோப்பை கேப்டன்   அர்ஜுன ரணதுங்க தோல்வி. Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.