கண்டி தவுலகல பகுதியில் நடந்தது என்ன?


கடந்த 02/01/2019 அன்று ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் A.G ஹிஷாம் M.I.Sc அவர்களின் உம்மம்மா
(தாயாரின் தாய்) காலமானார்கள். அந்த தாய் நபி வழி அடிப்படையில் தங்கள் அத்தனை வணக்க வழிபாடுகளையும் அமைத்துக் கொண்டவர் ஆவார்.


அன்னார் நோய் வாய்ப்பட்டு இருந்த சந்தர்ப்பத்தில் சகோ A.G ஹிஷாமி டம் தன் ஜனஸா முழுக்க முழுக்க நபி வழி அடைப்படையில் அடக்கபட வேண்டும் என்றும் அதற்கு சகோ ஹிஷாமே பொறுப்பு என்றும் சகோ ஹிஷாமிடம் கூறியிருந்தார்.


அந்த அடிப்படையில் குறித்த பெண் மணி மரணித்தவுடன் வஹுங்கொஹ ஜும்மா பள்ளி வாசலில் தொழுகை நடத்த பள்ளிவாசல் தலைவரிடம் காலையிலேயே அனுமதி கேட்கப்பட்டது. ஊர் வழமைக்கு மாற்றம் என்று அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவரை நேரடியாக சந்தித்து கடிதம் மூலம் காரணங்களைத் தெளிவுபடுத்தி அனுமதி கேட்க்கப்பட்டது அப்போதும் யூஸூப் முப்தியின் குடும்பத்தினரும் எமது பள்ளியில் தொழுகை நடத்த அனுமதி கேட்டு மறுத்துள்ளோம் எனவே உங்களுக்கும் அனுமதிக்க முடியாது என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.


அப்படி என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகை நடத்தப்படும் திடலில் தொழுகை நடத்துகிறோம் உங்களை தொல்லை பண்ணமாட்டோம் திடலில் தொழுகை நடத்தப்படும் என்பதை பள்ளி வாசலில் அறிவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் முடியாது என்று மறுக்கப்பட்டது.

ஊர் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதி கேட்கப்பட்டது ஏன்?

ஊரில் வழமையாக ஜனாஸாக்கள் கெட்டகும்பர பெரிய பள்ளி வாசலில் தொழுகை நடத்தப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படும்.

அங்கு தொழுகை நடத்தாமல் ஊர் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதி கேட்கப்பட்டதற்கு முக்கிய காரணங்கள்

1.கெட்டகும்பர ஜும்மா பள்ளி வாசலில் கப்ரு கட்டப்பட்டு இறந்தவர்களிடத்தில் துஆ கேட்கப்படுகிறது. இணைவைப்பான காரியத்தை செய்வதால் அங்கு தொழுகை நடத்த கூடாது என்பது மார்க்கத்தின் நிலைப்பாடு. எனவே அங்கு தொழுகை நடத்தக்கூடாது.

2.குறித்த பெரிய பள்ளி வாசலின் கிப்லா சரியாக இல்லை.
முஸ்லிம்கள் கஃபதுல்லாஹ்வை நோக்கித்தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயக்கடமையாகும். ஆனால் பெரிய பள்ளி வாசலின் கிப்லா தவறு என்ற சார்ச்சை இருப்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
எனவே எங்களுக்கு அங்கு தொழுகை நடத்த முடியாது.
(கிப்லா பிரச்சினை காரணமாகத்தான் ஊர் பள்ளியில் தொழுகை நடத்த யூசூப் முப்தியின் குடும்பம் அனுமதி கேட்டார்கள் என்பது பள்ளி நிர்வாகம் ஒத்துக் கொண்ட விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஊரில் சில ஜனாஸா தொழுகையின் போது குறித்த பெரிய பள்ளியில் அங்கு சென்று பள்ளிவாசலில் நியமிக்கப்பட்ட கிப்லாவுக்கு மாற்றமாக தொழுகை நடத்துவார்கள்.அப்படித்தான் யூசூப் முப்தியின் குடும்பத்தச்சார்ந்த ஜனாஸாவிலும் தொழுகை நடத்தப்பட்டது என்பது பள்ளி நிர்வாகத்தின் வாக்குமூலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் குழப்பம் விளைவிக்கக்கூடாது என்ற அடிப்படையில் எமது மார்க்க விவகாரங்களை எமது பகுதியில் செய்து விட்டு அங்கு அடக்கம் செய்தால் பெரிய பள்ளி நிர்வாகத்திற்கு எந்த சிக்கலும் இல்லை.அவர்கள் மார்க்க விடயத்தில் நாங்கள் நுழையத்தேவை இல்லை என்பதால் வஹுங்கொஹையில் தொழுகை நடத்தப்பட்டு கெட்டகும்பர பெரிய பள்ளி வாசல் பகுதியில் உள்ள மைய்யவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸாவை அடக்கம் செய்ய சுமந்து சென்ற சந்தர்ப்பத்தில் சில குழப்பவாதிகள் ஊர் வழமைக்கு மாற்றமாக தொழுகை நடத்த விடமாட்டோம் என்று குழம்பம் விளைவிக்க சல சலப்பு ஏற்பட்டது. இருந்தாலும் குடும்பத்தினர் உறுதியாக இருந்த காரணத்தால் உயிரே போனாலும் நபி வழி விட்டுக் கொடுக்கப்படாது என்ற அடிப்படையில் குழப்பத்தை எதிர் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

நல்லடக்கத்தின் பின்னர் குழம்பம் ஏற்படுத்திய குழம்பவாதிகள்.

நபி வழி அடிப்படையில் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு ஊர் திரும்பிய சந்தர்ப்பத்தில் குழம்பவாதிகள் ஊளையிட்டு கிண்டல் பண்ணியது மட்டுமல்லாமல் கல் எறிந்து தாக்குதல் நடத்தினார்கள்.

தோல்வியை சந்தித்த ஆத்திரத்தில் இது போன்ற மோசமான செயலில் ஈடுபடுவது வழமை என்ற அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மன்னித்துவிட்டனர். ஆனால் மீண்டும் இரவு நேரத்தில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தவுலகல கிளை மர்கஸுக்கு கல் எறிந்து தாக்குதல் நடத்தினர்.
அத்தோடு தவ்ஹீத் வாதிகளிடம் தரக்குறைவான பேச்சுக்களைப் பேசி சலசலப்பை உண்டு பண்ணினார்கள். அதன் பின்னரும் பொறுமை காக்க முடியாது என்ற அடிப்படையில் SLTJ தலைவர் ஹிஷாம் மற்றும் அவரின் குடும்பத்தினர் 02/01/2019 அன்று போலிஸில் புகார் கொடுத்தனர்.

வெள்ளிக்கிழமை விசாரணைக்கு போலிஸ் தரப்பில் அழைத்திருக்கும் பட்சத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜும்மாவை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.
அல்லாஹ்வின் உதவியால் போலிஸ் பாதுகாப்பில் ஜும்மா நடை பெற்றது. குழப்பவாதிகள் குழம்பம் விலைவிக்க செய்த முயச்சியை அல்லாஹ் வீணாக்கிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

போலிஸில் நடைபெற்ற விசாரணை.

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பையும் வஹுங்கொஹ பள்ளி வாசல் நிர்வாகம் உட்பட்ட எதிர் தரப்பைப்பை போலிஸிற்கு அழைத்தனர்.
தவுலகல O.I.C தலைமயில் விசாரணை நடைபெற்றது.
எதிர் தரப்பு சார்பாக பள்ளி வாசல் தலைவர் மற்றும் சிலரும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  A.G ஹிஷாம் M.I.Sc (SLTJ தலைவர்) மற்றும் அவர் குடும்பத்தினர் 
சிலர் கலந்து கொண்டார்கள்.

பல வருடங்கள் கடைபிடித்து வந்த நடை முறைக்கு மாற்றமாக தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டது எமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இனிவரும் காலங்களில் ஊர் வழமையில் கடைபிடிக்க வேண்டும் என்பது வஹுங்கொஹ ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் வாதமாக இருந்தது.

இலங்கையில் அரசியல் யாப்பின் படி ஒரு நபர் தான் விரும்பும் விதத்தில் தன் மார்க்கக் கடமையை கூட்டாகவோ தனியாகவோ நிறை வேற்ற முடியும். இந்த சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் இனிவரும் காலங்களிலும் ஊர் வழமைக்கு மாற்றமாக நபி வழி அடிப்படையில் தான் ஜனாஸா தொழுகை மற்றும் எமது அத்தனை வணக்க வழிபாடுகளையும் செய்வோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பதில் சொல்லப்பட்டது.

நடு நிலையாக விசாரனை நடத்திய தவுலகல பொலிஸ் O.I.C
மத சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது.தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க விவாகாரங்களை அவர்கள் விரும்பும் விதமாக நடத்துவார்கள் அதை யாரும் தடுக்கக்கூடாது.

ஊர் பள்ளி வாசல் நிர்வாகம் விரும்பும் விதத்தில் அவர்கள் மார்க்க விடயங்களை நடத்திக் கொள்ளலாம் அதில் தவ்ஹீத் ஜமாஅத் தலை போடக்கூடாது என்று முடிவு சொல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜும்மாவிற்கு வெளியூர் காரர்கள் வரக்கூடாது என்று எதிர் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். போலிஸ் தரப்பு அந்த கோரிக்கையில் எம்மிடம் வைத்த போது சட்டத்தில் எந்த ஊர் காரரும் எந்த ஊருக்கும் போகும் உரிமை உள்ளது சட்டத்திக் ஏதாவது விதி இருந்தால் கட்டுப்படுகிறோம் சட்டத்தில் இல்லாத பட்சம் கட்டுப்பட முடியாது என்று பதில் சொல்லப்பட்டது.
ஊர் பள்ளி வாசலுக்கும் வெளியூரில் இருந்து ஜும்மாவிற்கு வருகிறார்கள் அதை யாரும் தடுக்காமல் இருப்பதைப் போல் எம்மையும் யாரும் தடுக்கக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பதில் சொல்லப்பட்டது.

இருந்தாலும் வெளியூர் வாசிகள் வழியாக எந்த பிரச்சினையும் வராமல் இருக்க ஒழுக்கத்தை கடை பிடிக்க அறிவுரை சொல்லப்படும்.
ஊர் வாசிகள் சார்பாக எந்த குழம்பமும் விளைவிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

கெட்டகும்பர பெரிய பள்ளி வாசல் நிர்வாகம் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ஜனாஸா அடக்குவதில் மாற்றுக் கருத்தில் இருந்தால் அவர்களுடன் பேசி முடிவு செய்யுமாறு போலிஸ் சார்பாக கூறப்பட்டது.

பெரிய பள்ளிவாசல் தவ்ஹீத் வாதிகளின் ஜனாஸா ஊர் வழமைக்கு மாற்றமாக இருந்தால் அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர்.

மையவாடிகள் பிரதேச சபைக்குச் சொந்தமானது அதை பராமரிக்கும் பொறுப்பு மட்டுமே பள்ளி வாசல் நிர்வாகத்திற்கு உள்ளதே தவிர யாரை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்பது நாட்டு சட்டம் ஆகும். (இது தெரியாமல் தான் பல ஊர்களில் பள்ளி வாசல் நிர்வாகம் ஜனாஸாவில் குழம்பம் விலைவிக்கிறார்கள்.
பள்ளி வாசல் நிர்வாகிகள் இலங்கை அரசியல் சாசனத்தையும் நாட்டின் சில முக்கிய சட்டங்களையும் படித்து அவர்களுக்குள்ள அதிகாரம் என்னவென்பதை அறிந்து கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.)
எனவே பெரிய பள்ளிக்கு ஜனாஸா அடக்கம் செய்வதைத் தடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை பெரிய பள்ளி வாசல் சார்பாக போலிஸுக்கு வந்த நபரிடம் கூறப்பட்டது.

அடுத்து என்ன?

தவ்ஹீத் வாதிகளின் ஜனாஸாவை அடக்கவிடாமல் தடுப்பது குறித்து இறுதி முடிவு என்னவென்று பெரிய பள்ளி வாசலுடன் ஆலோசிக்கப்படும்.
தவ்ஹீத் ஜமாஅத் நபி வழி அடிப்படையில் அவர்களின் ஊரில் மார்க்க கடமைகளை நிறை வேற்றி விட்டுத்தான் வருவார்கள்.அதை தடுப்பது தான் முடிவு என்றால் பெரிய பள்ளி வாசல் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து உரிமையை வென்றெடுப்போம். இன்ஷா அல்லாஹ்!

இலங்கை அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் சட்டத்திற்கு எதிராகவும் ஒட்டு மொத்த ஊரே ஒன்று திரண்டாலும் எதுவும் செய்ய முடியாது.இன்ஷா அல்லாஹ்!

நாட்டின் ஜனாதிபதியே நினைத்தாலும் சட்டத்திற்கு முறனாக நடக்கமுடியாது என்று நீதி மன்றம் உணர்த்தியதை யாரும் மறந்திருக்கமாட்டோம். அப்படியிருக்கும் நாட்டின் சட்டத்திற்கு எதிராக பள்ளி வாசல் நிர்வாகம் போனால் அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் சட்டத்தைக் கற்றுக் கொடுக்க ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவே இருக்கிறது.இன்ஷா அல்லாஹ்!

இதை விட பெரிய பிரச்சினைகளை சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இது புதிது அல்ல.அல்ஹம்துலில்லாஹ்!
உயர் நீதி மன்றம் வரைக்கும் சென்று எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் அதை சந்தித்து உரிமையை வென்றெடுக்க ஜனாஸாவின் குடும்பத்தினர் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க விவாகாரங்களின் பெரிய பள்ளிவாசல் மூக்கை நுழைக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

இறுதியான அறிவுறை

சத்தியத்தில் இருந்து சட்டரீதியாக போராடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சில நேரங்களில் சத்தியத்திற்கு வெற்றி கிடைக்க தாமதிக்கலாம் ஒரே காலமும் தோற்றும் போகாது என்ற நம்பிக்கையில் போராட வேண்டும்.

எப்போதும் சட்டரீதியாகவே போராட வேண்டுமே தவிர சட்டதை யாரும் கையில் எடுக்ககூடாது.சட்ட ரீதியில் போராடினால் தவ்ஹித் ஜமாஅத் தவுலக கிளைக்கு கிடைத்த வெற்றியைப் போன்று ஒவ்வொறு பகுதியிலும் கிடைக்கும் என்பதை இலங்கையில் இருக்கும் ஒவ்வொறு தவ்ஹீத் வாதிகளுக்கும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கூறிக் கொள்கிறோம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத். 
ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை 

கண்டி தவுலகல பகுதியில் நடந்தது என்ன? கண்டி தவுலகல பகுதியில் நடந்தது என்ன? Reviewed by Madawala News on January 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.