இன்ஷா அல்லாஹ் ஓர் வேகபந்து வீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பெற்று தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்பை பெற வேண்டும்.


கண்டி மடவளை மதீனா பாடசாலையின்  (முன்னாள்)   வலது கை வேக பந்து வீச்சாளர் சிராஸ் ஸஹாப்
அயர்லாந்து அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் மூலம்   முதல் தடவையாக இலங்கை A அணிக்காக விளையாடும் சந்தர்பத்தை பெற்று இன்று கொழும்பு ssc மைதானத்தில்  இடம்பெற்ற போட்டியில் 4 விக்கட்டுகளை  தனது அசத்தலான  பந்துவீச்சு மூலம் வீழ்த்தி   சாதித்தும் காட்டியுள்ளது அறிந்ததே..


BRC கிரிகட் கழகத்திற்காக தற்போது விளையாடும் சிராஸ் ஸஹாப் இந்த பருவ காலத்திற்கான இலங்கை  கிரிகட் சபையின் மேஜர் எமர்ஜீங் லீக் முதல் தர கிரிகட் தொடரில் இதுவரையில் 4 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கட்டுக்களை கைபற்றி இருப்பது குறிப்பிடதக்கது .


இதேவேளை கடந்த ஆண்டு நடைப்பெற்ற வர்தக நிறுவனங்களுக்கு இடையிலான T20 கிரிகட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த சிராஸ் ஸஹாப் அவற்றில் 5 விக்கட்டுகளை தனதாக்கி கொண்டார் .


அதே நேரம் கடந்த ஆண்டு 23 வயதுக்கு கீழ்பட்ட மாகாண அணிக்கு இடையிலான கிரிகட் தொடரில் மத்திய மாகாண அணிக்காக விளையாடி 26 விக்கட்டுக்களுடன் குறித்த தொடரில் அதிக விக்கட்டுக்களை கைபற்றிய வீரராகவும் சாதனையை நிலை நிறுத்தினார்...
அவருடன் ஒரு நேர்காணல்..

உங்களை பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?
நான் சிராஸ் ஸஹாப் 13.02.1995 ஆண்டு பிறந்தேன் மடவளை பிறப்பிடமாக கொண்டவர். ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை மடவளை மதீனரவில் தான் கல்வி கற்றேன் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவன் எனது குடும்பத்தை பொருத்தமட்டில் தந்தை எம்.எச் ஸஹாப் தாய் ஜே.யு ஸரீகா சகோதரி எம். எஸ் ஸிபானி மற்றும் மற்றும் சகோதரன் எம். எஸ் ஸிஹான்.


கிரிகட் விளையாட்டில் ஈடுபாடு எவ்வாறு வந்தது 
எனது சிறுவயதிலே நான் விளையாட்டு என்ற ரீதியில் முதலில் விளையாடப்பழகியது கிரிகட் தான் அதுவும் நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக  விளையாடியது பாடசாலை கற்கும் காலங்களில் பாடசாலை அணியில் எவ்வாறாயினும் இணையவேண்டும் என்பதற்காக வெகுவாக கஷ்டப்பட்டேன் முயற்சிகளின் மூலமும் பயிற்சிகளின் மூலமும் வாய்பு கிடைத்தது .


எனது பயணத்திற்கான களமும் கிடைத்தது.பங்குபற்றிய   ஒவ்வொரு போட்டியும் என்னுள் ஆர்வத்தை தூண்டியது .இன்னும் முயற்சி;க்க  வேண்டும் என்னால் இன்னும் முடியும் என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்;தது 

இலங்கையின் தேசிய  கிரிகட் A  அணியில் இடம்பிடித்திருக்கிறீர்கள் உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கின்றது. 

எத்தனையோ போட்டிகளில் இதற்க்கு முன் கலந்துகொண்டு தான் இருக்கின்றேன் இப்போட்டியில் பங்கு பற்ற வாய்ப்பு கிpடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருகின்ற அதே வேளை பதற்றத்தையும் உணர்கின்றேன் . இந்த செய்தியை நான் தெரிந்து கொண்ட போது  அடைந்த மகிழ்ச்சியை விட  பெற்றோரிடம் பகிரும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . 


 கிரிகட் துறையில் தேசிய அணிவரை முன்னேறுவதில் உள்ள சவாலாக எதனை கருதுகின்றீர்கள் ?

கிரிகட் விளையாட்டு என்பதே சவால்களுடன் கூடிய விளையாட்டு தான் தேசிய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் இலங்கையின் தேசிய  யு  கிரிகட் அணியில் மூலம்  போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பது தனது திறமையை காட்ட சந்தர்பமாகும் சவால்களுடன் போட்டியிட்டு தேசிய அணியில் இடம்பிடிப்பேன்  இன்ஸா அல்லாஹ் 


இத்துறையில் பயணிக்கும் போது எப்போதாவது மனம் சோர்ந்ததுண்டா?
நிறைய சந்தர்பங்கள் இருக்கின்றன . பாடசாலையில் கற்கும் காலங்களில்  கிரிகட் பயிற்சிகளில்களில் காட்டிய ஆர்வத்தை கற்றலில் செலுத்த முடியவில்லை ஓர் போராட்டத்துடன் தான் இரண்டையும் எதிர் கொண்டேன்


சில போட்டினளில் விளையாடும் போது தலை குனியவேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டிருக்கின்றன அச்சந்தர்பங்களில் பயிற்றுவிப்பாளர்களின் ஊக்குவிப்புக்களே  பக்க பலமாக அமைந்தது
நான் ஒரு வேக பந்து வீச்சாளார் என்ற வகையில் உடல் சார்ந்த உபாதைகளுக்கும் உள்ளாகி இருக்கின்றேன். 


அச் சந்தர்பங்களில் சற்று மனம் தளர்ந்தும் விடுவதுண்டு பின்னர் நானே மனதை திடப்படுத்தி கொண்டு போட்டியிடவும் தொடங்கி விடுவேன் .தற்போது எதனையும் ஏற்றுகொண்டு பயணிக்கும் அளவுக்கு பக்குவமடைந்துள்ளேன் என நினைக்கின்றேன்

உங்கள் சாதனையின் இரகசியம் யாது ?
இதனை நான் சாதனை என்று கூற விரும்பவில்லை இதனை எனது பயணத்தின் ஆரம்ப என்றே  கூறுகின்றேன்.

கிரிகட் துறையில் நீங்கள் முன்மாதிரியாக கருதும் வீரர் யார் 
நுவன் குலசேகர


நுவன் குலசேகரவை நீங்கள் முன்மாதியாக கருதுவதற்கான காரணம்
ஏனக்கு சிறுவயதில் இருந்தே ; பந்து வீச்சில் ஓர் ஆர்வம் இருந்தது .அவரை பின்பற்றி பந்து வீசவும் கற்றுக்கொண்டேன் . தற்போது அவரை பின்பற்றி பந்து வீசுவது இலகுவாக உள்ளது.

நம் நாட்டு வீரர் என்றவகையிலும் .நான் பங்குபற்றி கழகத்தின் மூலம் அவருடன் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துத அவரது அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார் .அறிவுரைகளையும் பெற்று கொண்டேன் . வரும் காலத்தில் நுவன் குலசேகர போன்று ஓர் வேக பந்து வீச்சாளராக தேசிய அணியில் இடம் பிடிப்பதே எனது கனவாகும்


உங்களது இக் கிரிகட் பயணத்தில் மறக்க முடியாத நாட்கள் பற்றி 
நான் தேசிய கிரிகட் A அணியில் போட்டியிடுவகற்காக தெரிவு செய்யப்பட்டள்ளேன் என்ற செய்தியை அறிந்து கொண்ட அன்றய நாள்.  மற்றும் Mobital  36 th  OBSERVER  school boy cricketer of the  year -2014  இல் நான் முதலிடம் பெற்று கொண்ட வெற்றியை எனது முழு ஊரும் சேர்ந்து கொண்டாடிய தினம் இவ்விரு தினங்களிளும் நான் அடைந்த மகிழ்ச்சி என்னற்றது நிச்சயமாக இவ்விரு தினங்களையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

சிறுபான்மை இனத்தவர்கள் தேசிய அணியில் இடம்பிடிப்பது இலகுவானதல்ல இன ரீதியான பாரபட்சங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற ஒரு போது  அபிப்பிராயம் நிலவுகின்றது. உங்களது அனுபவத்தில் இதனை எவ்வாறு நோக்குகின்றீர்கள்


நிச்சயமாக இல்லை. பொதுவாகவே சகலரும் என்னிடம் கேட்கும் கேள்வியும் இது தான் . இது வரை காலமும் நான் பங்குபற்றிய போட்டிகளாட்டும் பயிற்றுவித்த பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளார்களாகட்டும் என்னிடம் எவ்வித பாகுபாட்டையும்  காட்டியதில்லை. என்னை பொருத்தமட்டில் என்னால் முடியுமான முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றேன் எனது திறமையை வெளிப்படுத்தும் சந்தர்பத்தில் எனக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது

உங்கள்  எதிர்கால இலட்சியம் என்ன
ஓர் வேகபந்து வீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பெற்று தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்பை பெறவேண்டும்


இச்சந்தர்பத்தில் யாருக்காவது நன்றி செலுத்த வேண்டும் என நினைகின்றீரா
நிச்சயமாக முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன் எனது பெற்றோர் என்னை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள் எனது குடும்பத்தினர் எனது நண்பர்கள் மதீனாவின் ஆசிரியர்கள்  மேலும் எனது ஊர் மக்கள் சகலருக்கும் கூற வேண்டும்.


உண்மையாக கூறுவதானால் எனது வெற்றியின் பக்க பலமாக இருந்தவர்களுக்கு நன்றி செலுத்துவற்கான சந்தர்பம் இதுவரை கிடைக்கவில்லை இச்சந்தர்பத்தின் மூலம் கிடைக்க பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  நேர்காணல் : பஸ்னா பாயிஸ்
   மடவளை
இன்ஷா அல்லாஹ் ஓர் வேகபந்து வீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பெற்று தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்பை பெற வேண்டும். இன்ஷா அல்லாஹ் ஓர் வேகபந்து வீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பெற்று தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்பை பெற வேண்டும். Reviewed by Madawala News on January 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.