2019ஆம் ஆண்டுக்கான உலகின் பலம் கூடிய கடவுச்சீட்டுகள்...


2019ஆம் ஆண்டுக்கான சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்பது குறித்த புதிய Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 190 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம்.

இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்குச் செல்லலாம்.

மூன்றாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கடவுச்சீட்டுகள் 7ம் மற்றும் 8ம் இடங்களிலிருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இலங்கை 95வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி 43 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்தியா 79 ஆம் இடத்தில் ( 61 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம்)

பாகிஸ்தான் 102 ஆம் இடத்தில் ( 33 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம்)

முழு அட்டவணை : https://www.henleypassportindex.com/passport-index
2019ஆம் ஆண்டுக்கான உலகின் பலம் கூடிய கடவுச்சீட்டுகள்... 2019ஆம் ஆண்டுக்கான உலகின் பலம் கூடிய கடவுச்சீட்டுகள்... Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.