(வீடியோ இணைப்பு) உடல் இயக்கம் நின்ற நிலையிலும் சாதிக்க துடிக்கும் முகமத் அலி.


அஸ்ஸலாமு அலைக்கும்  எனது பெயர் மக்கின் முகமத் அலி.
 நான் வவுனியா சூடு வெந்த புலம் வசிப்பிடமாக கொண்டிருக்கிறேன்

2015ஆம் ஆண்டு  இலங்கை மின்சார சபையில் வேலை செய்யும் பொழுது  லைட் போஸ்டில் இருந்து கீழே விழுந்து  இடுப்புக்கு கீழ் துப்புரவாய் ஒன்றும் இயங்காது  சக்கர நாற்காலியில் நான்கு வருடமாக இருக்கின்றேன்.


  நான் ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன்  நான்  சக்கர நாற்காலியில் இருந்த நாட்களில்  ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது  அல்லாஹ்வின் துணையால்  நான் சக்கரநாற்காலியில்  கூடைப்பந்து   சக்கர நாற்காலி  ரேஸ்   சக்கர நாற்காலியில் இருந்து குண்டு எறிதல்  இப்படிப்பட்ட போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று  இருக்கின்றேன்.

  அண்மையில்  2018 ஆம் ஆண்டு   வடமாகாண தமிழ்  para   சக்கர நாற்காலி ஓட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டேன்  .

கொழும்புக்கும் சென்றிருக்கின்றேன் நேஷனல் விளையாடுவதற்காக  கொழும்புக்கு சென்று சக்கர நாற்காலி இல்லாத காரணத்தால்  என்னுடைய சக்கர நாட்காலி ஓடி மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டேன்.

 நேஷனல்  2018 ஆம் ஆண்டு  மற்றும்  சக்கர நாற்காலியில் இருக்கும் அனைத்து  மாற்றுத் திறனாளிகளும்  சளைத்தவர்கள் அல்ல என்பதற்காக  வவுனியாவில் இருந்து  முப்பத்தாறு மணித்தியாலங்களில்  கொழும்பு சென்றடைந்தேன்.

  தற்பொழுது   வருகின்ற நம் தாய் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு  என்னுடைய சக்கரநாற்காலியில்  முழு இலங்கையும் சுற்றிவர எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் .


 வருகின்ற முதலாம் திகதி ஆரம்பமாக இருக்கின்றது  என்னுடைய பிரயாணம்  நான் இந்தப் பிரயாணம் செய்வதற்காக  அரசாங்கத்திடம்  கடிதம் அனுப்பி இருந்தேன்  எனக்குப் பாதுகாப்பு தரும்படி  இன்றுடன்  20 நாட்கள் ஆகின்றது  கடிதத்துக்கு எந்த பதிலும் என்னிடம் கிடைக்கப்பெறவில்லை    அனுப்பிய போட்டோ கொப்பி என்னிடம் உள்ளது  நான் அனுப்பிய கடிதத்துக்கு  பதில் வராவிட்டாலும் கூட  அல்லாஹ்வின் துணையால்  யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்க இருக்கின்றேன் எனது பிரயாணத்தை  அரசாங்கத்திடமிருந்து பதில் வராவிட்டாலும்கூட ஓட இருக்கின்றேன்.


  சமூக நல்லிணக்கத்துக்காக  சிங்களம் தமிழ் முஸ்லிம் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக  என்னுடைய சக்கரநாற்காலியில் பையனுக்கு இருக்கின்றேன் மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


  எனது பிரயாணம்  நல்ல பயணமாக அமைய  இறைவனிடம் பிராத்தனை  செய்யுங்கள்  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
 
(வீடியோ இணைப்பு) உடல் இயக்கம் நின்ற நிலையிலும் சாதிக்க துடிக்கும் முகமத் அலி. (வீடியோ இணைப்பு) உடல் இயக்கம் நின்ற நிலையிலும் சாதிக்க துடிக்கும் முகமத் அலி. Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.