ஆளுனர் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ?மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை
கொண்டுவர, மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனரென தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்பித்து அதனை நிறைவேற்றும் வகையில், இருதரப்பும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கொழும்பு அரசியல் பிரமுகர் ஒருவரிடம் நாம் வினவிய போது அதற்கான சில ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆளுனர் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ? ஆளுனர் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ? Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5