இலங்கை நீதித்துறையை புகழ்ந்துவிட்டு யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஏன் ?



ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பின் பின்  நாட்டின்
நீதித்துறையை புகழ்ந்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஆச்சர்யமாக உள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாக மிக அண்மையில் புகழ்ந்து கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தற்போது யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றார்கள். இந்த நாட்டின் நீதித்துறை மீது தமக்கு நம்பிக்கை உள்ளது என கூறிவிட்டு ஏன் இன்று இவர்கள் சர்வதேச விசாரணைகளை கோருகின்றனர்.

இவர்கள் இவ்வாறு கோருவதன் பின்னனியில் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையை தாண்டி வேறு எதோ ஒரு விடயம் இருக்க வேண்டும். நாட்டில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டிற்குள் உள்ள சுயாதீன நீதி மன்றத்தில் நியாயம் கோரிய இவர்கள் வேறு விடயங்களையும் நாட்டிற்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நீதித்துறையை புகழ்ந்துவிட்டு யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஏன் ? இலங்கை நீதித்துறையை புகழ்ந்துவிட்டு யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஏன் ? Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.