(வீடியோ இணைப்பு) கார் — லாரி விபத்தில் 6 ஆண்கள் உயிரிழப்பு.



இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வென்னப்புவ, நயினமடம பாலத்திற்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்றும் லொறியொன்றும் மோதியே இந்த கோர  விபத்து இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ நோக்கி பயணித்த லொறி மீது, பின்னால் பயணித்த கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விருந்தொன்றில் கலந்துகொண்டு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்மாஷூறா / மடவளை நியூஸ்

(வீடியோ இணைப்பு) கார் — லாரி விபத்தில் 6 ஆண்கள் உயிரிழப்பு. (வீடியோ இணைப்பு)   கார் — லாரி விபத்தில் 6 ஆண்கள் உயிரிழப்பு. Reviewed by Madawala News on January 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.