(படங்கள்) யாழின் ஒரே முஸ்லிம் பெண் பாடசாலையான ஹதீஜா பெண்கள் கல்லூரி துரித கதியில் மீள் நிர்மாணம்.


-பாறுக் ஷிஹான்-
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பழைய இடத்தில் அமையப்பெறவுள்ள
  யாழ் முஸ்லீம் மக்களின் ஒரே ஒரு பெண் பாடசாலையான ஹதீஜா பெண்கள் கல்லூரி புனரமைப்பு தொடர்பான இறுதிகட்ட செயற்பாடுகளை துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

கடந்த கால யுத்தம் காரணமாக    குறித்த பாடசாலை    கடுமையாக சேதமடைந்த நிலையில் தற்போது பல தரப்பினரின் அயராத முயற்சியினால் மீளவும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

இறுதி கட்டமாக அப்பாடசாலைக்கு மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் முயற்சிகளை மேற்கொண்டு நிதியுதவியை வழங்கி இருந்தார்.

இதனடிப்படையில் இப்பாடசாலையின் இறுதிக்கட்ட வேலைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஷின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் (நிலாம்)  சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த கல்லூரிக்கு மின்சார வசதி குடிநீர் வசதி என்பவை  தொடர்பில் ஆராயும் முகமாக அங்கு சென்றதுடன் யாழ் கதீஜா மகளிர் கல்லூரி அதிபர் ஜன்ஸீ கபூரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது குறித்த பாடசாலையில் பாதுகாப்பற்ற கிணறு தொடர்பான விடயம் தொடர்பில் அதிபரினால் முறைப்பாடு ஒன்று தெரவிக்கப்பட்டது.

உடனடியாக குறித்த கிணற்றுக்கு  பாதுகாப்பு வேலிகளை அமைத்து தருவதாக மாநகர சபை உறுப்பினர் அவ்விடத்தில் வாக்குறுதி வழங்கியுள்ளார்.இது தவிர தற்போது வரை தற்காலிகமாக இப்பாடசாலை யாழ் ஜின்னா மைதானத்திற்கருகே 200க்கும் அதிகமான மாணவிகளுடன் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள்) யாழின் ஒரே முஸ்லிம் பெண் பாடசாலையான ஹதீஜா பெண்கள் கல்லூரி துரித கதியில் மீள் நிர்மாணம். (படங்கள்) யாழின் ஒரே முஸ்லிம் பெண் பாடசாலையான ஹதீஜா பெண்கள் கல்லூரி துரித கதியில் மீள் நிர்மாணம். Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5