கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் விபரம், துப்பாக்கியால் சுட்டவர்கள் விபரம் வெளியானது.


கல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற லஹிரு சந்தருவன் எனும் அங்குலான உதார என்று தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் சில மாதங்களுக்கு முன்னர் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொனா கோவிலே ரொஹான் என்ற பிரபல பாதாள உலக குழுத் தலைவனின் நெருங்கிய சகா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குலான அஞ்சுலா என்ற பாதாள உலக குழுத் தலைவனின் சகாக்களே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் விபரம், துப்பாக்கியால் சுட்டவர்கள் விபரம் வெளியானது. கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் விபரம், துப்பாக்கியால் சுட்டவர்கள் விபரம் வெளியானது. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5