பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைபுலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்..



வவுணதீவில் பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை  சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் மாவீர்தின நிகழ்வுகளிற்காக மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜநாயகம் சர்வானந்தம்  என்ற 48 வயது முன்னாள் போரளியொருவர் இந்த சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி விசாரணைகளிற்காக மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவர் பிரபாகரன் அஜந்தன் என பெயர்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் பிரபாகரன் அம்பாறை தம்புலுவிலை சேர்ந்தவர்; என தகவல்கள் வெளியாகியுள்ளன

தாண்டியடியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றன என காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கிய தாண்டியடி என்ற பகுதியில் விசேட அதிரடி படையினரின் முகாம் அமைந்திருந்ததால் பொது மக்கள் மாவீரர் நாளை கொண்டாட முடியாத நிலைகாணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு இந்த வருட மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்தது என தெரிவித்துள்ள காவல்துறையினர்  கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் இந்த அமைப்பின் தலைவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்கள் மாவீரர் நாள் நினைவுகளிற்கான நிதியை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் மாவீரர் தின நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் காவல்துறையினருக்கும்  நிகழ்வை ஏற்பாடு செய்த சிலரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் நவம்பர் 26 ம் திகதி தாண்டியடிக்கு சென்று மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் தங்கியிருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைபுலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்.. பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைபுலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்.. Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.