இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்ற போட்டியை , சிறப்பான துடுப்பாட்டம் மூலம் வெற்றி தோல்வியின்றி முடித்த இருவர்.


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி
தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 282 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 79 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களைப் பெற்று 296 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 03 விக்கட் இழப்பிற்கு 20 ஓட்டங்களை மட்டுமே பெற்ற பரிதாப  நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது

இந்நிலையில் களம் இறங்கிய அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் சிறப்பாக , நிதானமாக துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று வலுவான நிலையில் போட்டி நான்காம் நாளை நிறைவடைய
மழையும் குறுக்கிட்டது.

அதனை அடுத்து இன்று குசல்  மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களையும் பெற்று இன்னிங்க்ஸ் தோல்வியில் இருந்தும் , போட்டி தோல்வியில் இருந்தும் இலங்கை அணியை காப்பாற்றி 3 விக்கட் இழப்புக்கு 287 ஓட்டங்கள் பெற்று  போட்டியை  ​வெற்றி தோல்வியின்றி முடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.
இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்ற போட்டியை , சிறப்பான துடுப்பாட்டம் மூலம் வெற்றி தோல்வியின்றி முடித்த இருவர். இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்ற போட்டியை , சிறப்பான துடுப்பாட்டம் மூலம் வெற்றி தோல்வியின்றி முடித்த இருவர். Reviewed by Madawala News on December 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.