"இந்த கலாச்சாரம் இலங்கை நாட்டில் இல்லை. இந்த சம்பவத்திற்கு வெட்கப்பட வேண்டும்." விபரீத முறைப்பாட்டை செய்தவர்களுக்கு பொலிஸ் அதிகாரியின் அறிவுரை.


தனது கணவர் அவரது நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்வை பேணுவதாக தெரிவித்து மனைவி
காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , மனைவிகளை மாற்றிக்கொள்வோம் என கூறிய கணவர் தொடர்பில் அனுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.

முறைப்பாட்டை மேற்கொண்ட பெண் அவரது கணவர் அவரது நெருங்கிய நண்பரின் மனையுடன் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பினை பேணி வந்தததை அறிந்துக்கொண்டுள்ள நிலையில் , பின்னர் குறித்த பிரச்சினையை தீர்த்துத்தருமாறு கோரி காவல் நிலையம் சென்றுள்ளார்.

அதன்படி , இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது , இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறை அதிகாரி முறைப்பாட்டை மேற்கொண்ட பெண்ணின் கணவரிடம் விசாரித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த குறித்த நபர் , தான் தனது நண்பரின் மனையுடன் கள்ளத்தொடர்பை பேணுவது உண்மை எனவும் , நான் அவரை விரும்புகிறேன் எனவும் நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளோம் எனவும் காவற்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் , " இல்லை இல்லை நான் இவரிடம் எங்கேயும் சென்றதில்லை. இவர் கூறுவது அனைத்தும் பொய்" என நண்பரின் மனைவி தெரிவித்துள்ளார்.

பின்னர் , குறுக்கிட்ட குறித்த நபர் , " இல்லை இல்லை இவர் சொல்வது அனைத்தும் பொய் , நாங்கள் இருவரும் சென்ற இடங்களுக்கு சான்று உள்ளது . மேலும் அவரின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை என்னால் கூற முடியும்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் , குறித்த அங்க அடையாளங்களை காவற்துறை அதிகாரியிடம் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் விபரீதத்தை உணர்ந்த காவற்துறை அதிகாரி , உடனடியாக குடும்ப பிரச்சினையை தீர்க்கும் வகையில் குறித்த கணவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதன்போது , "இல்லை சார் இவரை அழைத்துச் செல்ல எனக்கு விருப்பம் , எனது நண்பருக்கு கூறுங்கள் எனது மனைவியை அழைத்துச் செல்லுமாறு" என காவற்துறை அதிகாரியிடம் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து , முறைப்பாட்டை மேற்கொண்ட பெண் , "எனது கணவரை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் , எனக்கு வேறு யாருடனும் செல்ல எந்த தேவைப்பாடும் இல்லை" என கூறியுள்ளார்.

இதன்போது , இருவரினதும் கைப்பேசிகளை சோதனையிட்ட காவற்துறை அதிகாரி , ' இருவரும் அநேகமான குறுந்தகவல்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். இனி இதுபோன்ற தவறுகள் ஏற்படக்கூடாது. முறைப்பாட்டை செய்த பெண்ணின் கணவர் கூறுவது
போன்ற கலாச்சாரம் இலங்கை நாட்டில் இல்லை. இரு தரப்பிலும் வயதுக்கு வந்த பிள்ளைகள் உள்ளனர். இது போன்ற சம்பவத்திற்கு வெட்கப்பட வேண்டும்." என கூறி பிரச்சினையை காவற்துறை அதிகாரி தீர்த்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"இந்த கலாச்சாரம் இலங்கை நாட்டில் இல்லை. இந்த சம்பவத்திற்கு வெட்கப்பட வேண்டும்." விபரீத முறைப்பாட்டை செய்தவர்களுக்கு பொலிஸ் அதிகாரியின் அறிவுரை. "இந்த கலாச்சாரம் இலங்கை நாட்டில் இல்லை. இந்த சம்பவத்திற்கு வெட்கப்பட வேண்டும்." விபரீத முறைப்பாட்டை செய்தவர்களுக்கு பொலிஸ் அதிகாரியின் அறிவுரை. Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.