பணத்திற்கு அடிமையாகாமல் தமது பதவிகளை தூக்கி வீசி விட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது தலைமை இருக்கின்றது.


பணத்திற்கு அடிமையாகாமல் தமது பதவிகளை தூக்கி வீசி விட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற
சமூகமாக எமது தலைமை இருக்கின்றது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை, அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஒரு பாரிய அரசியல் முரண்பாடு ஏற்பட்டிருக்கின்ற நிலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒரு பாரிய பல இனங்களாலும், பல அரசியல்வாதிகளாலும், அரசியல் தலைமைகளாலும் பேசுகின்ற சக்தியாக இருக்கின்றது.


அரசியலில் சாணக்கியம் மாத்திரமல்ல ஒரு நியாயமான, இறையான்மையான அரசியல் தீர்வை எடுத்த சமூகம் என்ற வரலாற்றை பதித்த முஸ்லிம் சமூகத்தின் தலைமையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டிலே மதிக்கப்பட்டிருக்கின்ற வேலையிலே நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

பணம் வீசப்பட்ட போதும் எந்தவித பணத்திற்கும் அடிமையாகாமல் முஸ்லிம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக தமது பதவிகளை தூக்கி வீசி விட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது தலைமை இருக்கின்றது.

எங்களுக்கு அரசியல் அதிகாரம் வரும், ஆனால் நேர்மையான, நியாயமான அரசியல் அதிகாரத்தை பெறுவோம். அரசியல் அதிகாரம் வருகின்ற போது எவ்வாறு அரசியல் அதிகாரத்தை செய்து முடிப்போம் என்பதை கிழக்கு மாகாண ஆட்சிக் காலத்தில் செய்து முடித்து இருக்கின்றோம்.

கிழக்கின் முதலமைச்சராக இருந்த காலப் பகுதியில் மாகாணத்தினதும், மாவட்டத்தினதும் குறிப்பாக பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும் முன்பள்ளி ஆசிரியைகளினது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு அவர்களுக்கான நிரந்தர சம்பளம் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்றவற்றை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதன்போது வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் அடங்களாக புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் ஆர்.வாஷித் அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயீல் ஹாஜி, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பணத்திற்கு அடிமையாகாமல் தமது பதவிகளை தூக்கி வீசி விட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது தலைமை இருக்கின்றது. பணத்திற்கு அடிமையாகாமல் தமது பதவிகளை தூக்கி வீசி விட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது தலைமை இருக்கின்றது. Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.