கௌரவிக்கப்படும் பாடசாலை சாதனையாளர்களும் புறக்கணிக்கப்படும் அரபுக் கல்லூரி மாணவர்களும்....!!!


இலங்கையின் நாளா பக்கமும் பல  முஸ்லிம் பாடசாலைகள் உண்டு அரசாங்கத்தினால் முஸ்லிம் மாணவ,
மாணவிகளுக்கென்று  பிரத்தேயகமாக இயங்குகின்ற இப் பாடசாலைகளானது ஏனைய மாற்று மத பாடசாலைகளுக்கு கொடுக்கும் சலுககைகளுக்கு ஏற்ற வாரு கொடுத்திருந்திருந்தாலும் முஸ்லிம்களின் மார்க்க விழுமியங்களை பின்பற்றி நடப்பதற்கு முழு சுதந்திரமும் இந்  நாட்டு அரசாங்கத்தினால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் வரலாற்றில் கல்வியல் துறையில் பல சாதனைகளின் சொந்தக்காரர்களாக முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளார்கள். தற்போதும் சாதனை படைத்தும் வருகிறார்கள். ஐந்தாம் தர புலமைப் பரீசில் முதல் கொண்டு கல்விப் பொதுத் தரா தரப் சாதாரண தரப் பரீட்சை,உயர் தரப் பரீட்சை,பல்கலைக் கழக பட்டப்படிப்பு,ஏனைய நாடளாவிய போட்டிப் பரீட்சைகள் வரை முஸ்லிம்கள் சாதனை படைத்து வந்துள்ளார்கள்.

இவ்வாறான பல சாதனைகளுக்கு சொந்த கார எம்முடைய முஸ்லிம் மாணவர்களின் கல்வியை எமது அரசாங்கமே  இலவசமாகவே கொடுக்கின்றது. அது மட்டு மன்றி நாடளாவிய ரீதியில் தரம் ஐந்தாம் தர புலமைப் பரீசில் சித்தி பெறும் மாணவர்களுக்கு   அரசாங்கம் இலங்கையின் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்புக்களை கொடுத்துதவுதோடு அவர்களின் உயர் தரப் பரீட்சை வரையான காலப்பகுதி வரை குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தையும் மாதமொருமுறை வழங்குகின்றது.

இவ்வாறான பல சலுககைளை கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு  எம் நாட்டு அரசாங்கமே சீருடை முதல் கொண்டு பாடத்திட்டத்துற்கான புத்தகங்களையும் இலவசமாக கொள்வனவு செய்கின்றது.

அது மட்டு மன்றி பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதராண தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில்,மாவட்ட ரீதியில், முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இந் நாட்டு அரசாங்கம் இலவச வெளி நாட்டு புலமைப் பரிசீல்கள் கொடுப்பதும், அவற்றிலும் ஏழை எழிய மாணவ,மணவிகளுக்கு பிரபல நிறுவனங்கள் பொருளாதார உதவிகளை செய்வதற்கு முன் வருவதையும் நாம் அறிந்ததே.

மற்றும்  உயர் தர பரீட்சை முதல் கொண்டு ஏனைய தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி பெறுபவர்களும் கௌரவிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த கால நிகழ்வுகள் பரை சாற்றுகின்றன.

எவ்வாறாயினும் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எழுச்சிக்கும்,ஊக்குவிப்புக்கு ம்,அவர்களின் சாதனைகளை பாராட்டி கௌரவித்து பரிசில் மாலைகள் வழங்கவும் பல அரசியல் வாதிகள் முதல் கொண்டு பல நிறுவனங்களும்  தனவந்தர்களும் வரிசைக் கிரகமாக நிற்க்கிறார்கள்.

மறு பக்கம் எமது திரு நாட்டில் நூற்றுக் கணக்கான அரபு கலாசாலைகள் உள்ளன. அதில் அநேக கலாசாலைகளில் தரம் எட்டுக்கு சித்தியடைந்ததற்கு பிற்பாடே மாணவர்களை ஒரு தேர்வின் மூலம் உள்வாங்குகிறார்கள்.ஹிப்ழ் மாணவர்களை தவிர ஏனைய கிதாபு மாணவர்கள்  தற்போதய கால கட்டத்தில் பாடசாலைக் கல்வியையும் ஒன்றினைத்து அவர்களின் கிதாபு பாடத்திட்டத்திற்கு அமைவாகவே எடுத்துச் செல்கிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழ் நிலையில் தனது பாடசாலை பாடத்திட்டத்தையும் அரபு மொழி பாடத்திட்டத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு செல்லும் அரபுக் கல்லூரி மாணவ,மாணவிகளை உண்மையில் பாராட்டியே ஆக வேண்டும்.

ஏனெனில் சாதரணமாக தமது  தாய் மொழியில் தான் அநேகர் தனது பாடசாலைக் கல்வியை அரசாங்க பாடசாலைகளில் தொடர்கிறார்கள்.ஆனால் அரபுக் கலாசாயைில் அரபியில்தான் கிதாபு பாடத்திட்டங்களை கற்க வேண்டும் ஆனால் அதற்கான பாட புத்தகங்கள் எந்தவொரு (அநாதை மதரசாக்களை தவிர) ஏனைய மதரசாக்களில் இலவசமாக வழங்குவதில்லை.

குறிப்பாக எமது நாட்டில் அராங்க பாடசாலைகளில் படிப்பில் சற்று பின்தங்கிய மாணவ,மாணவிகளை அரபுக்கலாசாலையில் சேர்த்து வருக்கின்ற வழக்கம் ஒரு பக்கம் இருக்கின்றது. இருந்தாலும் கூட அநேகமாக பணக்காரர்களின் பிள்ளைகளை விட ஏழை அல்லது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே  மதரசாக்களில் சேர்ந்து படித்து வருவது வழமையாகவுள்ளது.

இவ்வாறு பல இன்னல்களுக்கும் கஷ்ட்டங்களுக்கும் மத்தியில்தான்  தன் மகனோ,அல்லது மகளோ ஒரு ஹாபிழாகவோ,மொளலவியாகவோ வர வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தனது உழைப்பு  தனது குடும்ப சீவியத்துக்கே போதுமானதாக இல்லாத போதும் தனது பிள்ளைகளின் நலன் கருதி அரபுக் கலாசாலையில் தனது பிள்ளைகளை கொண்டு  சேர்த்து விடுகிறார்கள்.

அவ்வாறிருந்தும் சில நேரங்களில் தங்களது மாதக் கட்டணங்களை கட்டுவதற்கு கூட வசதியற்ற பெற்றோர்களை கொண்ட சில மாணவர்கள் தனது விடுமுறைக் காலத்தில் தொழில் செய்தும் மாதக் கட்டணங்களை செலுத்தி வருகிறார்கள் என்ற கசப்பாண உண்மையை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

எவ்வாறாயினும் இன்று இலங்கையின் விரல் விட்டு எண்ணக் கூடிய சில பிரதேசங்களில் இருக்கின்ற தனவந்தர்கள் தானாகவே முன்வந்து அரபுக்கலாசாலையில் கற்கின்ற குறிப்பிட்ட மாணவர்களையும் அவர்களின் செலவீணங்களையும் பொறுப்பெடுத்து அவர்கள் ஹாபிழாகவோ,மௌலவியாகவோ ஆகும் வரை வழி நடாத்தி செல்கிறார்கள்.

தனது தாய்மொழிக்கு அப்பால் இரண்டாம் மொழி அரபியில் கற்கின்ற மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இரண்டாம்தரமாக கற்று கல்விப் பொதுத்தராதரப் சாதாரண தரப் பரீட்சை,உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்றால் கூட அவர்களை கௌரவித்து ஊக்குவிப்பதற்கு எந்தவொரு அரசியல் ஜாம்பவான்களோ தனவந்தர்களோ முன்வருவதில்லை.

அது மட்டு மன்றி இன்று எத்தனையோ எமது  நாட்டு மதரசா மாணவர்கள் ,கலைமாணி,இளமாணி,முதுமாணி போன்ற அரபுத் துறைசார்ந்த கற்கை நெறிக்காக புலமைப் பரீசில் மூலம் சவூதி அரேபியா,யெமன்,துருக்கி,எகிப்து ,போன்ற இன்னும் பல நாடுகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஏழை எழிய மாணவர்களுக்கு கூட எந்தவொரு நிறுவனமோ,அல்லது தனவந்தர்களோ,அரசியல் வாதிகளோ அவர்களின் எதிர் காலத்தை கருத்திற் கொண்டாவது ஒரு தொகை பணத்தையாவது கொடுத்து உதவி செய்தவற்கு முன் வருவதில்லை என்பதே இங்கு கவலைக்குறிய விடயமாகும்.

ஆகவே அன்பார்ந்த தனவந்தர்களே,அரசியல் வாதிகளே,தொண்டு நிறுவனங்களின்  அதிகாரிகளே  இவ்வாறான ஏழை மதரசா மாணவர்களின் கல்விற்காக  நீங்களும் முன்வந்துதவ வேண்டும் என்பதே எனது அன்பான கோரிக்கையும்,பண்பான வேண்டுகோளுமாகும்.

வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை
கௌரவிக்கப்படும் பாடசாலை சாதனையாளர்களும் புறக்கணிக்கப்படும் அரபுக் கல்லூரி மாணவர்களும்....!!! கௌரவிக்கப்படும் பாடசாலை சாதனையாளர்களும் புறக்கணிக்கப்படும் அரபுக் கல்லூரி மாணவர்களும்....!!! Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.