இ.போ.ச பஸ் மீது தாக்குதல்... ஒருவர் காயம்.


 இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றின் மீது இன்று  அதிகாலை
 சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது.

கதிர்காமத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணித்த பஸ் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து, சாவகச்​சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென்றும், இது தொடர்பான ​மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இ.போ.ச பஸ் மீது தாக்குதல்... ஒருவர் காயம். இ.போ.ச பஸ் மீது தாக்குதல்... ஒருவர் காயம். Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.