தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி - TNA இன்று பேச்சு.


தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


இதன்போது தமிழர்களின் பிரச்சனைக்கு எவ்வாறான தீர்வு வழங்கப்படும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளதுடன், அதற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என கூட்டமைப்பு இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர் சந்திப்பில் அவதானம் செலுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் நேற்று இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால ஆகியோர் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி - TNA இன்று பேச்சு. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி - TNA இன்று பேச்சு. Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.