தமிழ் அச்சு ஊடகத்துறையின் எதிர்காலம், கேள்விக்குறியாகும் நிலை?


By: Yahiya Rikaz Ahamad
நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் ஊடகத்துறை முன்னேற்றதில் பயணிக்கும் இன்றைய காலகட்டத்தில்
இலங்கையின் தமிழ் அச்சு ஊடகத்துறை பின்னடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆண்டரிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

 ‘தொழில்நுட்ப மாற்றத்தால் ஊடகத்துறைக்குள் புதிதாக பிரவேசித்த ‘டிஜிட்டல்’ மற்றும் இலத்திரனியல் மாற்றங்கள் அச்சு ஊடகத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தியதாக சிலர் கூறலாம். ஆனால், இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களே அச்சு ஊடகத்துறைக்கு சவாலாக மேலெழுந்துள்ளன என்பதே உண்மை. அது மட்டுமன்றி தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி போன்ற பிராதான ஊடகத்துறைக்கும் பாரிய சவாலாக மாறிவறுகிறது.


ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளிலுள்ள அச்சு ஊடகங்கள் ‘டிஜிட்டல்’ ஊடகங்களின் வரவால் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பதை இலங்கை மத்தியவங்கி அறிக்கை மற்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.


ஆசியாவின் பத்திரிகை ஊடகத்துறையின் கம்பீரமான இந்த முன்னேற்றத்தில் இலங்கையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயம் என அரங்கம் பத்திரிகை ஆசிரியரும் இலங்கை BBC தமிழ் சேவையின் சிரேட ஊடகவியளாளருமான திரு. சீவகன் பூபாலசிங்கம்  தெரிவிக்கிறார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிங்கள, ஆங்கில தினசரி பத்திரிகை விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழ் பத்திரிகைகளின் விநியோகத்தில்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது,

இதற்கு டிஜிட்டல் ஊடகங்களின் வரவே காரணம் எனவும் கூறினார். அத்தோடு தமிழ் பேசும் மக்கள் வெளிநாட்டு ,முக்கியமாக இந்தியாவில் இருந்து வரும் பத்திரிகை மற்றும் சஞ்சிகை மேலும் வளைதளங்களை நாடு வதும் இந்நிலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .


அந்நிய மொழிகளான சிங்களம், ஆங்கில அச்சு ஊடகங்களால் ‘டிஜிட்டல்” புதிய  ஊடகங்களின் சவாலுக்கு முகம்கொடுத்து விநியோகத்தில் சாதனை படைக்க முடிந்தது என்றால் தமிழ் அச்சு ஊடகத்துறையினரால் ஏன் முடியவில்லை என்பது கேள்விக்குரிய ஒரு விடயமக காணப்படுகிறது.


சமூக ஊடக வலைத்தளங்களை இன்றைய இளம்  சமூகம் அதிகம் நாடுவதும் அதன் வேகமான வளச்சியும் மேலெழுந்து வருகின்ற இன்றைய நிலைமயினால் மாற்று ஊடக வழி குறித்த மிகுந்த அக்கரையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டிய நிலைக்கு இன்றைய தமிழ் ஊடகங்கள் பிரதானமாக பத்திரிகை துறை தள்ளபட்டுள்ளது என்பது இதன் மூலம் உருதியாகியுள்ளது

Virakesari வீரகேசரி                                                                      
Thinakaran தினகரன்              
Thinakkural தினக்குரல்
Uthayan உதயன்
Sudar Oli சுடர் ஒலி
Tamil Mirror தமிழ் மிரர்……………
By ; Yahiya Rikaz Ahamad

தமிழ் அச்சு ஊடகத்துறையின் எதிர்காலம், கேள்விக்குறியாகும் நிலை? தமிழ் அச்சு ஊடகத்துறையின்  எதிர்காலம், கேள்விக்குறியாகும் நிலை? Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.