(வீடியோ) காத்தான்குடி இளைஞர் கண்டுபிடித்த ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரம் ஒரு பார்வை..


காத்தான்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200
இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா வீதியைச் சேர்ந்த நுஹ்மான் முகம்மது சிறாஜ் (வயது 25) எனும் இளைஞனே இவ்வாறு குறித்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார்.

மின்சாரத்தில் இயங்கும் வகையில் கண்டுபிடித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணித்தியாலயத்திற்கு 1200 தொடக்கம் 1500 வரையிலான இடியப்பங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க முடியும்.


இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு ஆறு மாத காலம் பிடித்துள்ளதுடன் 4 இலட்சம் ரூபா செலவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஒரே நேரத்தில் அதிகளவான இடியப்பங்களின் தேவை காணப்படுகின்றது. அதை தயாரிப்பதற்கு பல சிரமங்களை சிலர் சந்திக்கின்றனர். இவைகளை கருத்திற்கொண்டே இந்த இயந்திரத்தை கண்டு பிடித்து தயாரித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு இன்னும் சில இயந்திரங்களையும் கண்டு பிக்கவுள்ளதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ) காத்தான்குடி இளைஞர் கண்டுபிடித்த ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரம் ஒரு பார்வை.. (வீடியோ) காத்தான்குடி இளைஞர் கண்டுபிடித்த ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரம் ஒரு பார்வை.. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5