277 கோடி ஹெரோயின் விவகாரம்.. படகு உரிமையாளரின் வீட்டினை சோதனையிட்ட பொலிசாருக்கு சிக்கியவை.


ட்ரோலர் படகொன்றிலிருந்து நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட 277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்
தொடர்பில் பிரதான சந்தேகநபராக கைதுசெய்யப்பட்ட ட்ரோலரின் உரிமையாளரின் வீட்டினை சோதனையிட்ட பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், போதைப்பொருள் விற்பனையின் போது கிடைக்கப்பெற்ற பணமாக கருதப்படும் 59 இலட்சம் ரூபா ரொக்க பணமும் இரண்டு செய்மதி தொலைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 231 கிலோ 54 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ட்ரோலர் படகின் உரிமையாளர் சர்வதேச கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபாவும், இரண்டு செய்மதி தொலைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சந்தேகநபரை தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்திவரும் நிலையில், சந்தேகநபரது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை நீதிமன்றில் ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
277 கோடி ஹெரோயின் விவகாரம்.. படகு உரிமையாளரின் வீட்டினை சோதனையிட்ட பொலிசாருக்கு சிக்கியவை.  277 கோடி ஹெரோயின் விவகாரம்.. படகு  உரிமையாளரின் வீட்டினை சோதனையிட்ட பொலிசாருக்கு சிக்கியவை. Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.