(படங்கள் இணைப்பு) திருகோணமலை நகரில் பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில்  ஏற்பட்ட பதட்ட நிலை .

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை நகரில் உள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில்
புத்தரின் தலை பொறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (03) பிற்பகல் 3 மணியளவில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் ஐந்து பீஸ் கொண்ட ஆடைகளில் புத்தரின் தலை பொறிக்கப்பட்டமையினால் கடையை அண்மித்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்திற்கு திருகோணமலை ஜெயசுமராமய விகாரையின் விகாராதிபதி ஸ்தலத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் குறித்த இடத்திற்கு திருகோணமலை தலைமையக பொலிஸார் விரைந்து சென்றதுடன் அப்பகுதி பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இதேவேளை குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட புத்தரின் தலை பொறிக்கப்பட்ட 5 பீஸ் ஆடைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடையின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று வாக்கு மூலம் பெற்று வருவதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(படங்கள் இணைப்பு) திருகோணமலை நகரில் பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில்  ஏற்பட்ட பதட்ட நிலை . (படங்கள் இணைப்பு) திருகோணமலை நகரில் பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில்  ஏற்பட்ட பதட்ட நிலை . Reviewed by Madawala News on November 03, 2018 Rating: 5