ஐ.தே.க ஆதரவாளர்கள் 95 பேர் மட்டுமே... சம்பிக்க ரணவக்கவிடம் சவால்.


பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் சபாநாயகரைச் சந்தித்தவர்களின் பெயர்ப் பட்டியலை முடியுமாக
இருந்தால் வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிடம் சவால் விடுத்துள்ளார்.


நேற்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் 117 பேர் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஒப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார். இது முற்றிலும் பொய்யானது. இது பொய்கார சம்பிக்கவின் மற்றுமொரு பொய்யாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நேற்று வருகை தந்தவர்கள் 109 பேர் மட்டுமே. இதில் 12 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இருவர் ஜே.வி.பி. யைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கழித்துப் பார்த்தால் நேற்று வருகை தந்த அவர்களுக்கு சார்பானவர்கள் 95 ஆக குறைவடைகின்றது.


இவர்கள் பெரும்பான்மையைக் காட்டுவதற்கு எடுத்த முயற்சி அவர்களுக்கே இறுதியில் எதிராக முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

D C
ஐ.தே.க ஆதரவாளர்கள் 95 பேர் மட்டுமே... சம்பிக்க ரணவக்கவிடம் சவால். ஐ.தே.க ஆதரவாளர்கள்  95 பேர் மட்டுமே... சம்பிக்க ரணவக்கவிடம் சவால். Reviewed by Madawala News on November 03, 2018 Rating: 5