போதைப் பாவனை மற்றும் மோசமான நிகழ்வுகளின் நிலையமாக மாறியுள்ள பாழடைந்த அரச கட்டிடம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  நடுத்தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தின்( RDS )
பல் தேவை கட்டிடத்தின் தற்போதைய நிலை கவனிப்பாரற்று பாழடைந்து காணப்படுவதுடன் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான கட்டிங்கள் இல்லாமல் அபிவிருத்தி பணிகளை செய்வதில் பாரிய கஷ்டங்களை சில கிராமங்களில் சங்கங்கள்  எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இந்த நடுத்தீவு RDS தெரிவு செய்யப்பட்ட நிலையில் நிறுவாக ஒழுங்குமுறை சிறப்பாக இல்லாத காரணமே இதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. குறித்த கட்டிடத்தில் போதைப் பொருள் பாவனை போன்ற வேறு பிரச்சனைகளும்  RDS கட்டிடம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.


குறித்த கிராம அபிவிருத்திக்குச் சொந்தமான கட்டிடம் என கூறப்படும் இக்கட்டிடத்தை சாதகமான தேவை கருதி பயன்படுத்த உரிய அரச அதிகாரிகள் முன்வருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல அரச அதிகாரிகள் இது தொடர்பான விடயத்தில் கருத்தில் கொண்டு உதவுமாறு ஊர் மக்கள்  மேலும் கேட்டுக் கொள்கின்றனர்.



போதைப் பாவனை மற்றும் மோசமான நிகழ்வுகளின் நிலையமாக மாறியுள்ள பாழடைந்த அரச கட்டிடம். போதைப் பாவனை மற்றும் மோசமான நிகழ்வுகளின்  நிலையமாக மாறியுள்ள பாழடைந்த அரச கட்டிடம். Reviewed by Madawala News on November 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.